AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சாலையில் நின்றால் கொலை.. தவறை தட்டிகேட்டால் கொலை.. தவெக ஆட்சியில் ரெளடிகள் அச்சமின்றி நகர்வலம்.. எடப்பாடி!

Edappadi Condemned 11 Murders : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி நாளில் நிகழ்ந்த 11 கொலை சம்பவங் கள் தொடர்பாக தவெக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்தும், கண் டித்தும் உள்ளார் .

சாலையில் நின்றால் கொலை.. தவறை தட்டிகேட்டால் கொலை.. தவெக ஆட்சியில் ரெளடிகள் அச்சமின்றி நகர்வலம்.. எடப்பாடி!
முதல்வர் விஜய், எடப்பாடி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 09 Nov 2026 15:45 PM IST

தமிழகம் முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பல்வேறு பகுதிகளில் 11 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில், ஒரு காவல் சிறப்பு உதவி ஆய்வாளரும் அடங்குவார். இந்த சம்பவங்கள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி நாளில் பட்டாசு சத்தத்திற்கு இணையாக திருச்சி, சிவகங்கை, திருவள்ளூர், தேனி, சென்னை, கடலூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை சத்தமும் கேட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து தமிழகம் முழுவதும் ரத்தக் களறியாக மாறி இருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.

சாலையில் நின்றால் கொலை.. தட்டிக் கேட்டால் கொலை

சாலையில் நின்றால் கொலை.. தவறை தட்டி கேட்டால் படுகொலை. என்னும் அளவுக்கு ரவுடிகளும், குற்றவாளிகளும் தெருக்களில் அச்சம் இன்றி நகர்வலம் வரும் அளவுக்கு உலகத்தின் சட்டம்- ஒழுங்கை தள்ளி உள்ளது தவெக அரசு. இதில், உச்சகட்ட கொடுமையாக, தேனியில் பொதுமக்களை காக்க வேண்டிய சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் என்பவர் ரவுடிகளால் அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காக்கி சட்டைக்கே இங்கு பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களுக்கு எங்கே இருக்கும் பாதுகாப்பு.

மேலும் படிக்க: எஸ்.ஐ.யைக் கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி.. துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் ஆய்வாளர்!!

தவெக ஆட்சியில் கம்பீரம் இழந்து நிற்கும் காவல்துறை

அதிமுக ஆட்சியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற தமிழக காவல்துறை, தற்போது ஆட்சி செய்ய தெரியாத ஆச்சரிய குறி தவெக அரசால் பார்த்து போய் நிற்பது மிகுந்த வேதனைக்கூறியதாகும். அரசியல் என்பது சினிமா செட் கிடையாது. முதலமைச்சர் நாற்காலி என்பது பஞ்ச் டயலாக் பேசுவதற்கான மேடையும் கிடையாது என்பதை ரீல்ஸ் முதல்வர் விஜய் எப்போது புரிந்து கொள்வார். படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ.40 லட்சம் நிதி போதுமானது கிடையாது.

எஸ்.எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி அறிவிக்கனும்

அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக சரி லைன் ஆஃப் டூட்டி- இன்போது, உயிர் இழக்கும் காவலர்களுக்கு ரூ. 1 கோடி உறுதி செய்துள்ளோம். எனது, தவெக அரசு மேற்கண்ட நிதியை கூடுதலாக வழங்க வேண்டும். அத்துடன் அரசு வேலையும் வழங்க வேண்டும். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை கூட இந்த ஆச்சரிய குறி அரசுக்கு ஞாபகம் இல்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: “ரீல்ஸ் மோகத்தில் கொடூரம்!”.. சாலையை மறித்ததை தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் அடித்துக் கொலை.. தேனியில் அதிர்ச்சி!!

Follow Us