AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தட்டித் தூக்கிய சிவகாசி.. தீபாவளிக்கு ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை.. வாய்யை பிளக்க வைத்த விருதுநகர்!

Sivakasi Firecracker Sales Rs.7000 Crore : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ. 7 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், 2027- ஆம் ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு விற்பனை ரூ.10000 ஆயிரம் கோடியை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தட்டித் தூக்கிய சிவகாசி.. தீபாவளிக்கு ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை.. வாய்யை பிளக்க வைத்த விருதுநகர்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 09 Nov 2026 16:20 PM IST

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பல்வேறு விதமான பட்டாசுகளை வாங்கி அதனை வெடித்து கொண்டாடி இருந்தனர். இதன் மூலம், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்த ஆண்டு ரூ. 7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை, நாக்பூர் உரிமம் பெற்ற 1000- க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, லட்சக்கணக்கானோர் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த ஆலையில் தயார் செய்யப்படும் பட்டாசுகள் தீபாவளியையொட்டி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இவைத்தவிர வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசி

இந்தியாவில் 90 சதவீதம் பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் இந்த ஆண்டு 2026 ஆரம்பத்தில் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்ட காலகட்டத்தில் மழையின் சீதோசன சூழலால் பட்டாசு உற்பத்தி மந்தமான நிலையில் நடைபெற்றது. இதன் காரணமாக கடந்த ஆண்டை விட 30 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைந்திருந்தது. இதைத் தொடர்ந்து, பட்டாசு தயாரிப்பு வேகம் எடுத்த நிலையில் தொடர் விபத்துகளை சுட்டிக்காட்டி கடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளால் தொழிற்சாலைகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: பல தலைமுறைகளாக சத்தமில்லா தீபாவளி.. பட்டாசு வெடிக்காமல் தவிர்க்கும் கிராம மக்கள்.. அதுவும் தமிழகத்தில்.. என்ன காரணம்!

ரூ.7000 கோடிக்கு சிவகாசி பட்டாசுகள் விற்பனை

இதன் காரணமாக இந்த ஆண்டில் பட்டாசு உற்பத்தியில் ரூ. 8 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி செய்யப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தென்கிழக்கு நாடு போர் பதற்றம் காரணமாக மூலப் பொருட்களின் விலை போன்ற இன்னல்களால் பட்டாசு பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் படி, பட்டாசுகள் உற்பத்தியாகி நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பட்டாசு வியாபாரம் அனைத்து மாநிலங்களிலும் அமோகமாக நடைபெற்றுள்ளது.நாடு முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

2027- இல் ரூ. 10 ஆயிரம் கோடியை ஏட்டும் பட்டாசு விற்பனை

அதன்படி, நாடு முழுவதும் இந்த ஆண்டு பட்டாசு வர்த்தகம் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சரவெடி பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்திருந்த உச்சநீதிமன்றம், தற்போது நிபந்தனையுடன் பட்டாசு தயாரிப்புக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக 2027- ஆம் ஆண்டில் உற்பத்தி ரூ. 10 ஆயிரம் கோடி இலக்கை எளிதில் எட்ட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: சாலையில் நின்றால் கொலை.. தவறை தட்டிகேட்டால் கொலை.. தவெக ஆட்சியில் ரெளடிகள் அச்சமின்றி நகர்வலம்.. எடப்பாடி!

Follow Us