தனது அடுத்தப் படத்தின் ஊதியத்தில் முக்கிய முடிவு எடுத்துள்ள நடிகர் விஷால்? வைரலாகும் தகவல்
Actor Vishal Salary Details For New Movie Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவரின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் வலம் வருகிறார் விஷால் (Actor Vishal). இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினாலும் தொடர்ந்து பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷால் நடிப்பில் இதுவரை தமிழ் மொழியில் மொத்தம் 35 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் பெரும்பாலான படங்களில் நடிகர் விஷால் ஆக்ஷன் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஷால் நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மகுடம். இந்தப் படத்தை விஷால் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக அவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற தவறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் தற்போது புருஷன் படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாக உள்ள படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தனது புதுப் படத்தின் ஊதியத்தில் முக்கிய முடிவு எடுத்துள்ள விஷால்:
அதன்படி தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, முன்பணமும் இல்லை, நிலையான ஊதியமும் இல்லை. விஷால் நடிப்பில், துரை செந்தில்குமார் இயக்கவுள்ள புதிய திரைப்படம், முழுமையான திரைக்கதை தயாரான பிறகுதான் படப்பிடிப்பைத் தொடங்கும் என்பதில் தயாரிப்பாளர் லலித் குமார் உறுதியாக உள்ளார்.
குறிப்பிடத்தக்க மாற்றமாக, நடிகர் விஷால் இந்தத் திரைப்படத்தில் முன்பணமோ அல்லது நிலையான ஊதியமோ பெறாமல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதற்குப் பதிலாக, படத்தின் லாபத்தில் 100% பங்கினைப் பெறும் அடிப்படையில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்; அதாவது, அவரது ஊதியம் முழுமையாகப் படத்தின் லாபத்தைப் பொறுத்தே அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… ஜூனியர் பிக்பாஸிடம் சண்டைக்கு நிக்கும் சாதிகா… வைரலாகும் புரோமோ வீடியோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
vishal’s big decision No advance, No salary 😱.
producer lalit kumar is firm that the upcoming film starring vishal and directed by Durai senthilkumar will go on floors only after the complete bound script is ready👍🏻.
in a notable move, actor #vishal has agreed to act in the project without receiving any advance payment & fixed salary👏🏻.
instead, the actor is said to have signed the film on a 100% profit-sharing basis, making his remuneration entirely dependent on the film’s profits🤝.
Follow 👉 @FilmyBowlTamil
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) November 8, 2026
Also Read… அனிருத்தின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்தின் குடும்பம்!