AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் ரேங்கிங் டாஸ்க் குறித்து போட்டியாளர்களிடையே கேள்வி எழுப்பும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் போட்டியாளர்களிடையே ரேங்கிங் டாஸ்க் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகிறார்.

பிக்பாஸில் ரேங்கிங் டாஸ்க் குறித்து போட்டியாளர்களிடையே கேள்வி எழுப்பும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Nov 2026 15:52 PM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி (Bigg Boss Tamil Season 10). தமிழ் மொழியில் எப்போது வருடம் வருடம் அக்டோபர் மாதம் தொடங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பல சர்ப்ரைஸ்கள் பார்வையாளர்களுக்கு மட்டும் இன்றி போட்டியாளர்களுக்கும் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடர்ந்து 9-வது வாரம் முடிவிற்கு வந்துள்ளது. மொத்தம் 15 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் தற்போது உள்ள நிலையில் அவர்களுக்கு ரேங்கிங் டாஸ்க் நடைப்பெற்றது.

அந்த டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அவர்களை அவர்களே சுய பரிசோதனை செய்துகொண்டு இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஒன்று முதல் 15 வரை தங்களை வரிசைப்படுத்திக் கொள்ள பிக்பாஸ் அறிவுறுத்தினார். இதற்காக பிக்பாஸ் போட்டியாளர்களும் தங்களது வரிசை எண்ணை அவர்கள் முடிவு செய்து நின்றனர். அதில் சிலர் விருப்பமே இல்லாமல் கிடைத்த எண்ணில் நின்றதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் உங்களுக்காக நீங்க பேசலனா வேற யார் பேசுவா?

இந்த நிலையில் இன்று வார இறுதியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே அதுகுறித்து கேள்வி எழுப்புகிறார். அதில் முதல் இடத்திற்காக போட்டிப் போட்ட போட்டியாளர்களை தவிற மற்றவர்களிடையே அவர்கள் ஏன் அதற்காக போட்டிப் போடவில்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசுமாறு கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… தீபாவளி ஸ்பெஷல்… மரகத நாணயம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் ஓம் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் ஒன்லைன்? 

Follow Us