இரண்டு நாட்களில் சூர்யாவின் சீன் படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? வைரலாகும் தகவல்!
Scene Movie Box Office Update | நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சீன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலக அளவில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பது குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி வரிசையாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சீன் ஆகிய மூன்று படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான சீன் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி தற்போது வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் சீன். இந்தப் படத்தை மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு நாட்களைக் கடந்துள்ள நிலையில் இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.




இரண்டு நாட்களில் சீன் படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?
இந்தத் திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் 85 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. தெலுங்கு மாநிலங்களிலும் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு 200 கோடி ரூபாய் வசூலிக்கும் படம் தயாராகி வருகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. அவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார், ஒருவித காட் மோட்நிலையில் அசத்தி வருகிறார்.
Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
SURYA IS IN NO MOOD TO SLOW DOWN! 🔥
#SCENE has collected ₹85 crore worldwide in just 2 days, with an excellent run in the Telugu states.
Another ₹200 crore film loading! 🔥
And here’s the interesting part: Surya’s next film has already completed 70% of its shoot.
He’s moving at jet speed and operating in GOD MODE!
— Filmyscoops (@Filmyscoopss) November 8, 2026