AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sandiyar: கமல்ஹாசனின் பர்த்டே.. தொடங்கியது சண்டியர் திரைப்படத்தின் ஷூட்டிங் – வெளியான அறிவிப்பு!

Kamal Haasan 72nd Birthday: தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் இன்று (07/11/2026) தனது 72வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். அதை முன்னிட்டு அவரின் சண்டியர் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Sandiyar: கமல்ஹாசனின் பர்த்டே.. தொடங்கியது சண்டியர் திரைப்படத்தின் ஷூட்டிங் – வெளியான அறிவிப்பு!
சண்டியர் படத்தின் படப்பிடிப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Nov 2026 11:59 AM IST

பான் இந்திய சினிமாவில் உலகநாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டுவரும் நாயகனாக இருப்பவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவர் தமிழ் சினிமாவில் தனது சிறுவயதிலிருந்தே பயணித்துவருகிறார். இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 60வது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த இவர், தற்போது பழம்பெரும் நாயகனாக தமிழ் சினிமாவில் இன்னும் படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 230 திரைப்படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் தக் லைஃப் (Thug Life Movie) என்ற படம் வெளியான நிலையில், எதிர்பார்த்திருந்த வரவேற்பை பெறவில்லை. மேலும் இவர் தற்போது சித்தா மற்றும் வீர தீர சூரன் பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் (Director SU Arun Kumar) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு “சண்டியர்” (Sandiyar Movie) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (06/11/2026) இதன் முதல் பார்வை வெளியானது. அந்த வகையில் இன்று (07/11/2026) கமல்ஹாசன் தனது 72வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மக்கள் என் பக்கம் இருக்காங்க…. அரசியல் குறித்து முதன்முறையாக மனம் திறந்த தனுஷ் – விமர்சனங்களுக்கு பதில்

கமல்ஹாசனின் சண்டியர் திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கமல்ஹாசன், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பரீவ் இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த படமானது சில காரணங்களால் தள்ளிபோகியுள்ளது. அந்த விதத்தில் தற்போது இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் கிராமத்து கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கப்படவுள்ளதாம். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ப்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறாராம்.

இதையும் படிங்க: பொங்கல் ஸ்பெஷல்.. விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் நிலையில், இணைந்து நடிகர்கள் யார் யார் என இன்னும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்று (07/11/2026) கமல்ஹாசனின் பிறந்தநாளோடு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கும் ஷூட்டிங்கை மொத்தமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த விதத்தில் 2027ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us