AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பத்தூரில் 3 பேரை கட்டி போட்டு நகை- பணம் கொள்ளை.. தஞ்சாவூரில் பதுங்கிய முகமூடி கும்பல் கைது.. தனிப்படை அதிரடி!

Tirupattur Robbing Gold And Cash : திருப்பத்தூரில் வீடு புகுந்து 3 பேரை கட்டிப்போட்டு நகை மற்றும் பணத்தை கொள்ள அடித்து சென்று தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த முகமூடி அணிந்த 5 பேர் கும்பலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருப்பத்தூரில் 3 பேரை கட்டி போட்டு நகை- பணம் கொள்ளை.. தஞ்சாவூரில் பதுங்கிய முகமூடி கும்பல் கைது.. தனிப்படை அதிரடி!
கைதான 5 பேர் முகமூடி கும்பல்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 07 Nov 2026 12:05 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் கணவன், மனைவியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 5 முகமூடி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட தேவாங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபாகரன். பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கீதா, அவரது தாய் அம்பிகா ஆகியோர் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் 1- ஆம் தேதி அதிகாலை இவர்கள் 3 பேரும் வீட்டில் இருப்பதை அறிந்த முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து கட்டி போட்டு பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 16 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை- பணம் கொள்ளை

இந்த சம்பவத்தின் போது, வீட்டில் இருந்தவர்கள் கத்தியதில் அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த கொள்ளை கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன், கட்டி போடப்பட்ட 3 பேரையும் வைத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: மதுவை வாயில் ஊற்றி.. சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை.. தனி அறையில் அலறிய 3 சிறுவர்கள்.. சென்னையில் ஒருவர் கைது!

டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை கும்பல் தேடப்பட்டு வந்தது. இதில், திருட்டு கும்பல் பயன்படுத்திய கார் பதிவெண் மற்றும் செல்போன் சிக்னல்கள் மூலமாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் தஞ்சாவூரில் உள்ள மாந்தோப்பில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை அடிப்படை போலீசார் கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தது.

தஞ்சாவூரில் பதுங்கிய முகமூடி கும்பல் கைது

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நவீன் ( 26 வயது), சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் ( 39 வயது), பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் ( 25 வயது), சென்னை மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் ( 30 வயது), சேலத்தை சேர்ந்த மணிகண்டன் ( 40 வயது) ஆகியோர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சூர்யா, சுரேஷ், மகேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: மாணவர்களுக்கு தீபாவளி பரிசு.. விரைவில் மடிக்கணினி.. Intel Core i5 தரத்தில் விநியோகிக்க திட்டம்!

Follow Us