மாணவர்களுக்கு தீபாவளி பரிசு.. விரைவில் மடிக்கணினி.. Intel Core i5 தரத்தில் விநியோகிக்க திட்டம்!
Vetri Laptop Scheme : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் லேப்டாப்புகள் வழங்குவதற்காக ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் இலவச லேப்டாப்கள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருந்தார். இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், வெற்றி மடிக்கணினி திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2000 கோடி நிதிக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
இதற்கான டெண்டர்கள் விரைவில் வெளியிடப்பட்டு அதனை ஏற்கும் நிறுவனங்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதன் அடிப்படையில், மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் 2025- 2026- ஆம் கல்வி ஆண்டில் 4 மற்றும் 5- ஆம் ஆண்டுகள் பயின்ற மாணவ, மாணவிகளுக்கும், 2026- 2027 கல்வி ஆண்டில் 3 மற்றும் 4- ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: பட்டாசு வெடித்தால் காற்று மாசுபாடா.. நெவர்.. அதிக சத்தத்துடன் பட்டாசு வெடியுங்கள்.. வீ தி லீடர் அண்ணாமலை அழைப்பு!




Intel Core i5 தரத்தில் இலவச மடிக்கணினிகள் விநியோகம்
இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு Intel Core i5 தரத்தில் அல்லது அதற்கு இணையான தரத்தில் உள்ள இலவச மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி அனுபவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தை எளிதில் அணுகவும், இணைய வழி வகுப்புகள், மின்னணு பாட புத்தகங்கள் மற்றும் கல்வி தளங்களை பயன்படுத்தவும் நோக்கமாக கொண்டுள்ளது.
மாணவர்கள் கல்வி அறிவை மேம்படுத்த மடிக்கணினி
மேலும் கணினி அறிவை வளர்த்து திறன் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும். கல்விப் பணிகளை திறம்பட மேற்கொள்ளவும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித்துறையில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் இந்த முயற்சி மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அரசின் இந்த ஆணை வெற்றி மடிக்கணினி திட்டத்தை மேலும் வலுப்படுத்தி மாணவ சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க :நீலகிரியில் அதிர்ச்சி.. வனத்துறை ஜீப்பை முட்டி கவிழ்த்த காட்டு யானை.. உயிரை கையில் பிடித்தபடி நடுங்கிய 4 பேர்!