AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Pocket Novel: பொங்கல் ஸ்பெஷல்.. விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Pocket Novel Movie Release Date: தென்னிந்திய மக்கள் மத்தியில் ஹீரோவாகவும், வில்லனாகவும் மிகவும் பிரபலமானவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பிலும், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் கூட்டணியில் தமிழில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் பாக்கெட் நாவல். இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pocket Novel: பொங்கல் ஸ்பெஷல்.. விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
பாக்கெட் நாவல் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Nov 2026 11:07 AM IST

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. மேலும் இவர் தெலுங்கு இயக்குநர் இயக்கத்திலும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் இறுதியாக பத்தா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த வெற்றிக்கு பிறகு இவரின் நடிப்பில் பேக் டூ பேக் படங்கள் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. அந்த விதத்தில் இவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் (Director Thiagarajan Kumararaja) இயக்கத்தில் நடித்துவந்த திரைப்படம்தான் பாக்கெட் நாவல் (Pocket Novel Movie). இவர்கள் இருவரின் கூட்டணி ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் (Super Deluxe Movie) இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகளும் நடந்துவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ராம சகாப்தத்தின் தொடக்கம்.. முதல் நாளில் ராமாயணா உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த பாக்கெட் நாவல் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மக்கள் என் பக்கம் இருக்காங்க…. அரசியல் குறித்து முதன்முறையாக மனம் திறந்த தனுஷ் – விமர்சனங்களுக்கு பதில்

இந்த பாக்கெட் நாவல் படமானது பணக்கொள்ளை மற்றும் குடும்ப கதைக்களம் என வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில் வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14ம் தேதியில் இப்படம் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகர் விஜய் சேதுபதியின் இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு முதலில் இளையராஜா இசையமைப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்டுகள் மற்றும் பாடல்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது சூப்பர் டீலக்ஸ் படத்தை போலவே வித்தியாசமான ஜானரில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow Us