Vijay Sethupathi: பத்தா திரைப்படத்தின் வெற்றியால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!
Vijay Sethupathi Speech: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்போயிலும், இயக்குநர் அட்லீயின் தயாரிப்பிலும் வெளியான படம்தான் பத்தா. இப்படமானது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வெற்றிவிழாவை கொண்டாடியுள்ளது. அதில் நெகிழ்ச்சியாக விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் ஆரம்பகத்தகாலத்தில் சினிமாவில் துணை வேடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துவந்தவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தம் 50 திரைப்படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம்தான் பத்தா (Baththa). இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநர் பாலாஜி தரணீதரன் (Balaji Tharaneetharan) இயக்கியிருந்த நிலையில், இயக்குநர் அட்லீ (Atlee) தனது “ஏ ஃபார் ஆப்பிள்” என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், இவரின் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்திருந்தார். இந்த படமானது அப்பா மக்கள் மற்றும் ஒரு கேங்ஸ்டரின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. அந்த விதத்தில் இன்று (05/10/2026) இப்படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்ட நிலையில், அதில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: நான் மிகவும் கூலான அம்மாவாக இருப்பேன் – தமன்னா ஓபன் டாக்!
தனது பத்தா படத்தின் வெற்றிவிழாவில் நெகிழ்ச்சியாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி:
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய விஜய் சேதுபதி, அதில் “எனக்கு இன்னக்கி காய்ச்சல் இருக்கிறது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கும்பதெல்லாம், இது வழக்கமாகவே வந்துவிடும். இப்போது, பத்தா திரைப்படத்தின் வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இதையும் படிங்க: ‘பாலியல் வன்முறைக்கு இணையான குற்றம்’ – ஏஐ வீடியோ குறித்து ஜான்வி கபூர் கடும் கண்டனம்
மக்கள் ஒரு படத்தை விரும்பும்போது, டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பல வலைத்தளங்களில் அதை கொண்டாடவுகிறார்கள். பத்தா படத்தின் மீதான அன்பைப் பார்ப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என் அந்த மேடையில் மகிழ்ச்சியாக விஜய் சேதுபதி பேசியிருந்தார்.
பத்தா படத்தின் வெற்றிவிழாவில் விஜய் சேதுபதி பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
#VijaySethupathi at #Baththa Success Meet:
I have a fever, which I usually get whenever I’m very happy. Right now, I’m happy because of the success of Baththa.
When people like a film, everyone celebrates it across Twitter, Instagram and other platforms. Seeing that love for Baththa makes me very happy.
— Movie Tamil (@_MovieTamil) October 5, 2026
இந்த பத்தா திரைப்படமானது விஜய் சேதுபதியின் நடிப்பில், இந்த 2026ம் ஆண்டில் வெளியாகி நல்ல சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள நிலையில், கதை மற்றும் திரைக்கதையும் சிறப்பாக உள்ளது. இப்படமானது முதல் நாளிலே ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூலை பெற்று வெற்றியாகும் என படக்குழு எதிர்பார்க்கிறது.



