சேயோன் படம் பொங்கலுக்கு வெளியாகாதா? என்ன காரணம்
Seyon Movie Release Update | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சேயோன். இந்தப் படத்தின் வெளியீட்டு பொங்கல் பண்டிகைக்கு இருக்காது என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம் சேயோன். இந்தப் படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக தாய் கிழவி என்ற படத்தை இயக்கி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தாய் கிழவி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தப் படத்திலேயே இயக்குநர் சிவக்குமார் முருகேசன் உடன் கூட்டணி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தினை கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகின்றது.




சேயோன் படம் பொங்கலுக்கு வெளியாகாதா? என்ன காரணம்:
சேயோன் திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகையன்று வெளியாகாது. இப்படத்தின் படப்பிடிப்பில் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது, இன்னும் 40 சதவீதம் மீதமுள்ளது. நீங்கள் விரும்பியபடியே, ஒரு முழுமையான ‘மாஸ்’ கமர்ஷியல் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டு வருகிறது என்று சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Seyon is POSTPONED. It will not be releasing for Pongal 2027. 60% of the shooting has been completed, with 40% left. A pure mass commercial treat is being cooked up just the way you wanted. 🔥
Without a cinema background, both #VijaySethupathi and I have become actors. I’ve changed and proved that someone who does mimicry can also become an actor.
People who criticise will always criticise. Our focus should be clear. Study well, earn well, and family always comes first.
Don’t call me a “self-made star ⭐️”. I am a “people-made star ⭐️”, who came out of your affection.
— #Sivakarthikeyan at a fans meet with his fans https://t.co/chd0oSCiuR
— Movies Singapore (@MoviesSingapore) October 4, 2026