AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உங்களுக்கு எப்படி கருணை காட்டமுடியும்? முனியம்மாளை கேள்வியால் தாக்கிய விஜய் சேதுபதி – ப்ரோமோ இதோ!

ijay Sethupathi Confronts Muniyammal: நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சின்னத்திரையில் தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 10. 11வது வாரத்தின் இறுதியான இன்று (21/11/2026) விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்துள்ளார். இந்நிலையில் அவர் முனியம்மாளிடம் கேள்விகளால் தாக்கி பேசியது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

உங்களுக்கு எப்படி கருணை காட்டமுடியும்? முனியம்மாளை கேள்வியால் தாக்கிய விஜய் சேதுபதி – ப்ரோமோ இதோ!
முனியம்மாள் மற்றும் விஜய் சேதுபதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Nov 2026 15:29 PM IST

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்பட்டுவரும் ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ். இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கி தற்போது 11வது வாரத்தின் முடிவில் உள்ளது. இந்த வராம முழுக்க டிக்கெட் டூ ஃபினாலே-கான டாஸ்குகள் சிறப்பாக நடந்துவந்த நிலையில், அதிரடியாக இருந்தது. பல சண்டைகள் மற்றும் பல பிரச்சனைகள் என இந்த வாரம் முழுவதுமே பரபரப்பாக இருந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் நடந்த டிக்கெட் டூ ஃபினாலே (Ticket to the Finale) போட்டியில் அதிக புள்ளிகள் எடுத்து தன்யா இதை வென்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் அவர் பினாலே வாரம் வரையில் இந்த பிக் பாஸ் சீசன் 10 வீட்டில் இருப்பார் என கூறப்படுகிறது.

இந்த வாரமானது 11வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இன்று (21/11/2026) போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து வெளியான 2வது ப்ரோமோவில், அவர் முனியம்மாளிடம் கேள்விகளால் தாக்கி பேசியது தொடர்பாக காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கீர்த்தி மற்றும் கிருத்தி நடனத்தில்… ஜனவரி 12 விடுதல படத்திலிருந்து வெளியான டிவிக்கி டிவிக்கி பாடல்!

முனியம்மாளை கேள்விகளால் தாக்கி பேசிய விஜய் சேதுபதி:

இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, அன்சரை எழுப்பி அவரிடம் கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அன்சர், “முட்டைனு சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு, அதை வன்மமாக கொண்டு வருகிறீர்களே?” என முனியம்மாள் குறித்து கூறினார். இதன் பிறகு பேசிய விஜய் சேதுபதி, “உங்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டால், அடுத்த நொடியிலே விஷம் வைக்கிற அளவுக்கு போகிறீர்களே?.. அப்போது எப்படி உங்களுக்கு கருணை காட்டமுடியும் என எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் கேட்டல் உடனே விட்டுக்கொடுப்பவர் நல்லவர் என்று, அவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட நீங்கள் யார்?” என அவரிடம் கேட்டிருந்தார்.

இதையும் படிங்க: சம்பவம் காத்திருக்கு… பிக்பாஸில் இந்த வார நிகழ்வு குறித்து பேசும் விஜய் சேதுபதி!

மேலும் லக்ஷ்மி பிரியா, “இமேஜ் பார்த்துதான் பழகுகிறார் என ஏன் சொன்னேர்கள்” என முனியம்மாளிடம் விஜய் சேதுபதி கேட்டர். உடனே முனியம்மாள், “நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல-னு (LP) சொல்றத எந்த இடத்தில வெச்சிகாணும்” என கூறினார் அதன் பின் பேசிய விஜய் சேதுபதி, “அப்போது நீங்களும்தான்.. நீ பொம்பளையே கிடையாதுன்னு சொல்லிருக்கீங்க.. அத எங்க வெச்சுக்கணும்” என அதில் அவர் பதிலுக்கு பேசியிருந்தார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 76வது நாளின் 2வது ப்ரோமோ:

பிக் பாஸில் இந்த 11வது வாரத்தில் மொத்தம் 3 போட்டியாளர்கள் வாக்கு எண்ணிக்கை குறைவாக வைத்திருக்கிறார்கள். சாதிகா, முகேஷ் மற்றும் பிருத்வி என மூவரும் வாக்குகள் எண்ணிக்கை குறைவாக வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதில் ஒருவர் நிச்சயம் வெளியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us