AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சம்பவம் காத்திருக்கு… பிக்பாஸில் இந்த வார நிகழ்வு குறித்து பேசும் விஜய் சேதுபதி!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த 11-வது வாரம் முழுவதும் நடைப்பெற்ற டாஸ்குகள் மற்றும் போட்டியாளர்களின் செயல்கள் குறித்து இன்றைய எபிசோடில் நடிகர் விஜய் சேதுபதி பேச உள்ளது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

சம்பவம் காத்திருக்கு… பிக்பாஸில் இந்த வார நிகழ்வு குறித்து பேசும் விஜய் சேதுபதி!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2026 14:46 PM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் (Bigg Boss Tamil). இந்த நிகழ்ச்சி வருடத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பாகி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் 3 மாதங்களுக்கு மேல் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பி ரேட்டிங்கிங் வரும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது மட்டும் டிஆர்பியில் எப்போதும் முதலிடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்குகள், போட்டிகள் மற்றும் போட்டியாளர்கள் இடையே நடைபெறும் வாக்குவாதம் மற்றும் சண்டைகள் குறித்து விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசி வருகிறார். இந்த நிலையில் இன்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி இந்த 11-வது வாரம் முழுவதும் நடைப்பெற்ற நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக பேச உள்ளார்.

பிக்பாஸில் இந்த வார நிகழ்வு குறித்து பேசும் விஜய் சேதுபதி:

அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் வெளியான வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் போட்ட கியரிலேயே சிலர் இன்னும் வண்டியை ஓட்டிக்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வாரம் சிலர் தங்களது ஆட்டத்தை மேம்படித்தி உள்ளனர். பலருக்கு அவங்களின் ஆட்டம் எப்படி இருக்குது என்று வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய எபிசோடில் அனைத்தையும் விஜய் சேதுபதி பேச உள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… அருண் விஜய் பர்த்டே ஸ்பெஷல்…இருளன் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஃபினாலே வாரப் போட்டியில் மற்றொரு டாஸ்க்.. அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்கள் – ப்ரோமோ இதோ!

Follow Us