வெளியானது ஜெயிலர் 2 படத்திலிருந்து அன்ஃபினிஷ்ட் பிசினஸ் தீம்!
Unfinished Business Theme Out Now | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தில் இருந்து அன்ஃபினிஷ்ட் பிசினஸ் தீம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தினை முதல் பாகத்தினை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் இந்த ஜெயிலர் 2 படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




வெளியானது ஜெயிலர் 2 படத்திலிருந்து அன்ஃபினிஷ்ட் பிசினஸ் தீம்:
இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த ஜெயிலர் 2 படத்தில் இருந்து தற்போது அன்ஃபினிஷ்ட் பிசினஸ் தீம் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ரோமி, அனந்தகிருஷ்ணன், ஆனந்த் காசிநாதன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… OM & AOT.. தங்களின் படங்களுக்கு ஒன்றாக ப்ரோமஷன் செய்த மம்முட்டி – துல்கர் சல்மான்!
ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Another banger from #Jailer2! #UnfinishedBusiness is out now! 💥
▶️ https://t.co/0WoxgfWEv8
🎵 https://t.co/pcdhwsZsM5
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
— Sun Pictures (@sunpictures) November 21, 2026
Also Read… மகள் ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை குறித்து பரவும் வதந்தி… நடிகர் அர்ஜுன் கொடுத்த விளக்கம்!