AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இணையத்தில் வைரலாகும் நடிகர் விமலின் நவோரியா படத்தின் டீசர்!

Navoria Movie Official Teaser Out Now | நடிகர் விமல் நாயகனாக நடித்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் நவோரியா. இந்தப் படத்தின் டீசரை பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது வெளியிட்டு உள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் நடிகர் விமலின் நவோரியா படத்தின் டீசர்!
நவோரியாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2026 10:54 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல் (Actor Vemal). இவர் தமிழ் சினிமாவில் பல நாயகன்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து நாயகன்களின் நன்பனாக நடித்து வந்த நடிகர் விமல் பிறகு தமிழ் சினிமாவில் நாயகனாகவே நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் விமல் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தது. அதன் பிறகு தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த விமல் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சூழலில்தான் விலங்கு என்ற ஒரு இணையதள தொடரில் நடிகர் விமல் நடித்து இருந்தார். இந்தத் தொடர் ஜீ 5 ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல நல்ல படங்களில் மீண்டும் கமிட்டாகி நடிக்கத் தொடங்கினார் நடிகர் விமல். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் நடிகர் விமலின் நவோரியா படத்தின் டீசர்:

அந்த வகையில் நடிகர் விமல் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் நவோரியா. இந்தப் படத்தினை இயக்குநர் சிம்புதேவன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விமல் உடன் இணைந்து நடிகர்கள் ஆன் ஷீத்தல், ஆரி அருஜுனன், தம்பி ராமையா, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி, அப்புக்குட்டி, வடிவுக்கரசி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக்பாஸில் லக்‌ஷ்மி பிரியா மீதான வன்மத்தை கொட்டும் போட்டியாளர்கள் – வெளியானது வீடியோ!

நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ப்ரீ சேல்சில் கலைகட்டும் ஓ.எம் படம்… கொண்டாட்டத்தில் படக்குழு!

Follow Us