ஆக்ஷனுக்கு ரெடியா… சூர்யாவின் 49-வது படத்தின் இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்
Suriya 49 Movie Director Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது 48-வது படம் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்ததாக உருவாக உள்ள 49-வது படம் தொடர்பான அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூர்யா (Suriya). இவர் தற்போது தமிழ் மொழியில் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். தொடர்ந்து மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நடிகர் சூர்யாவை தற்போது ரசிகர்கள் தி ஒன் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த ஆண்டு சூர்யாவிற்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது தனது 48-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தினை இயக்குநர் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கி உள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து 49-வதாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.




சூர்யாவின் 49-வது படத்தின் இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்:
அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, சூர்யா 49 திரைப்படத்தை இயக்குவதற்காக அருண் மாதேஸ்வரனுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அவரே இந்த வாய்ப்பைப் பெறுவதில் முன்னணியில் உள்ளார். அவர் கூறிய கதை சூர்யாவுக்குப் பிடித்துப்போயுள்ளது. இது அதிரடி காட்சிகள் நிறைந்த ஒரு கமர்ஷியல் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இசையமைப்பாளரைப் பொறுத்தவரை, அருண் மாதேஸ்வரனுடன் ஏற்கனவே சிறப்பாகப் பணியாற்றிய அனிருத் அல்லது சூர்யாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ள சாய் அபியங்கர் ஆகிய இருவரில் ஒருவர் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது. எனினும், இசையமைப்பாளர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இப்படத்தை ‘ழகரம் ஸ்டுடியோஸ்’ (Zhagaram Studios) நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகத் தெரிகிறது.
Also Read… இயக்குநர் சங்கரின் அந்தப் படத்தை யாஷ் 5 முறை தியேட்டரில் பார்த்துள்ளார் – தயாரிப்பாளர் சொன்ன விசயம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya49 BUZZ – #ArunMatheswaran is in talks and currently the frontrunner to direct the movie. He has narrated a story that #Suriya liked, and it is said to be an action-packed commercial film for “The One”.
The music director is most likely to be the #DC success combo composer #Anirudh, who is in very good comfort with #ArunMatheswaran, or #SaiAbhyankkar, with whom #Suriya is on very good terms. The music composer is yet to be finalised.
The movie is said to be produced by Zhagaram Studios.
https://t.co/5x4UK5YyRw— Movies Singapore (@MoviesSingapore) November 18, 2026
Also Read… சீன் படத்தில் அந்த காட்சியை இவ்வளவு அன்புடன் கொண்டாடியதற்கு நன்றி – நடிகர் சூர்யா!