AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓ.எம் படத்திற்காக சாய் பல்லவி செய்த சூப்பர் சம்பவம்… வியக்கும் ரசிகர்கள்!

Sai Pallavi Recent Speech About O.M Movie | தென்னிந்திய மொழிகளில் மட்டும் இன்றி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் சமீபத்தில் ஓ.எம் படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

ஓ.எம் படத்திற்காக சாய் பல்லவி செய்த சூப்பர் சம்பவம்… வியக்கும் ரசிகர்கள்!
சாய் பல்லவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Nov 2026 13:03 PM IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi). இவர் தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தனது கல்வியில் கவனம் செலுத்தி வந்த நடிகை சாய் பல்லவி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திரும்பிய போது மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் ஆகும். இதில் மூன்று நாயகிகள் இருந்தாலும் சாய் பல்லவியின் மலர் கதாப்பாத்திரம் தான் மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்து வந்த நடிகை சாய் பல்லவி தற்போது இந்தி மொழியிலும் படங்களில் நடித்து வருகிறார்.

அதன்படி இறுதியாக இந்தி மொழியில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான ராமாயணா படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை சாய் பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓ.எம். இந்தப் படத்திற்காக தான் என்ன செய்தேன் என்பது குறித்து சாய் பல்லவி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஓ.எம் படத்திற்காக சாய் பல்லவி செய்த சூப்பர் சம்பவம்:

இந்தத் திரைப்படத்திற்காக நான் என் தலைமுடியை வெட்டிக்கொண்டேன். கதையைக் கேட்டு, எனது கதாபாத்திரம் எப்படிச் சித்தரிக்கப்படப் போகிறது என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன். இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனதால், இந்த ஒரு கதாபாத்திரத்திற்காக என் தலைமுடியை வெட்டிக்கொள்ள நான் மனமுவந்து முன்வந்தேன்.

தலைமுடியை வெட்டிய பிறகு, வீடியோ கால் மூலம் எனது புதிய தோற்றத்தை முதலில் என் தாயிடம் காட்டினேன். இதைக் கண்டு அவர் மிகவும் ஆச்சரியமடைந்தார்; ஏன் இப்படிச் செய்தேன் என்று பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். இது முழுக்க முழுக்க அந்தக் கதாபாத்திரத்திற்காகவே செய்யப்பட்டது என்று அவரிடம் விளக்கினேன் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… இயக்குநர் ஹரியின் அடுத்தப் படத்தின் நாயகன் இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா குறித்து நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட டொவினோ தாமஸ்… என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!

Follow Us