AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sai Pallavi: நான் போலீஸாக நடிப்பேன் என நினைத்ததே இல்ல – சாய் பல்லவி பேச்சு!

Sai Pallavi About Her Police Role In O.M Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவராக இருந்து, தற்போது பான் இந்திய முன்னணி நடிகையாக வளர்ந்திருப்பவர் சாய் பல்லவி. இவர் தனுஷின் ஓ.எம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த வேடத்தில் நடித்தது குறித்து தனது கருத்தை சாய் பல்லவி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Sai Pallavi: நான் போலீஸாக நடிப்பேன் என நினைத்ததே இல்ல – சாய் பல்லவி பேச்சு!
சாய் பல்லவிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 15 Nov 2026 20:42 PM IST

பான் இந்திய நடிகையாக இந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பேமஸான நாயகியாக இருந்துவருபவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் ராமாயணா: பார்ட் 1 (Ramayana: Part 1 Movie). இந்த திரைப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி (Director Nitesh Tiwari) இயக்கியிருந்த நிலையில், அதில் சாய் பல்லவி சீதையாக நடித்திருந்தார். இப்படம் 2026ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தில் சீதையாக நடித்த சாய் பல்லவியின் மீது பல விமர்சனங்கள் இருந்தது. சீதையாக இவர் எவ்வாறு பொருத்தமாக இருப்பார் என பலரும் கேள்விகள் மற்றும் விமர்சனங்களை எழுப்பிவந்தனர். இந்த படமானது வெளியாகி ரூ 1000 கோள்களுக்கும் மேல் வசூல் செய்து சிறப்பான சாதனையை செய்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்திற்கு பின் சாய் பல்லவியின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie).

இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கியுள்ளார். இப்படத்தில் “நித்யா ரெட்டி IPS” என்ற போலீஸ் அதிகாரியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படிப்பட்ட வேடத்தில் நடித்தது குறித்து அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: முற்றிலும் மாறுபட்டது…. ஓ.எம் படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? – ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!

ஓ.எம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தது குறித்து தனது கருத்தை பகிர்ந்த சாய் பல்லவி:

ஓ.எம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய சாய் பல்லவி, அதில் “நானே என்னை ஒருபோதும் இமேஜின் செய்து பார்க்கவில்லை, இப்படி ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பேன் என்று. சும்மா வீட்டில், “ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா” என டயலாக் பேசிக்கொண்டிருந்தேன்.

இதையும் படிங்க: எச்சரித்த விஜய் சேதுபதி.. வீட்டை விட்டு வெளியேற வேண்டுகோள் வைத்த ஜேசன் – அனல் பறக்கும் பிக் பாஸ் ப்ரோமோ!

ஆனால் அது சும்மா எனது சகோதரியுடன் சண்டையிடும்போது சும்மா எதாவது பண்ணியிருப்பேன். ஆனால் தற்போது அப்படிப்பட்ட வேடம் ஒன்றில் நடித்திருக்கிறேன். மேலும் இப்படத்தில் என்னுடன் ஸ்டண்ட் காட்சிகளில் பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் எனது மிக்க நன்றிகள்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

ஓ.எம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் குறித்து சாய் பல்லவி பேசிய வீடியோ பதிவு:

நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ஓ.எம். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் இதில் மம்முட்டி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ், தனுஷ் மற்றும் சாய் பல்லவி போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us