AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எச்சரித்த விஜய் சேதுபதி.. வீட்டை விட்டு வெளியேற வேண்டுகோள் வைத்த ஜேசன் – அனல் பறக்கும் பிக் பாஸ் ப்ரோமோ!

Bigg Boss Tamil 10: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி போட்டியிலர்களை சந்தித்துள்ள நிலையில், திமிராக பேசிய ஜேசனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அதற்கு ஜேசன் கொடுத்த ரியாக்ஷன் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

எச்சரித்த விஜய் சேதுபதி.. வீட்டை விட்டு வெளியேற வேண்டுகோள் வைத்த ஜேசன் – அனல் பறக்கும் பிக் பாஸ் ப்ரோமோ!
பிக் பாஸ் 10 ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 15 Nov 2026 16:39 PM IST

தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மக்களால் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). செப்டம்பர் 6ம் தேதி முதல் இந்நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜூனியர் பிக் பாஸ் என்ற டாஸ்க் நடந்த நிலையில், எதிர்பார்த்திருந்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமானத்திலிருந்து சாப்பாட்டிற்கு சண்டை, பேசினால் சண்டை மற்றும் பேசாவிட்டாலும் சண்டை என சண்டையிலே இன்றுவரையிலும் இந்த நிகழ்ச்சி இருக்கிறது. இந்த வீட்டில் தற்போது மொத்தமாக 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கடந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருந்தது.

மேலும் இந்த வாரத்தில் யாரும் வெளியேறமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரத்திலும் பிக் பாஸ் சீசன் 10 வீட்டில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த வாரத்தில் இறுதியில் ஜேசன் விஜய் சேதுபதி மற்றும் போட்டியை காணவந்த ரசிகர்களிடையே அநாகரீகமாகவும், திமிராகவும் நடந்துகொண்டிருந்தார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 முதல் டாய்ரா வரை… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் இதுதான்!

விஜய் சேதுபதி எச்சரித்ததற்கு ஜேசன் கொடுத்த ரியாக்ஷன்:

இந்த ப்ரோமோவில், விஜய் சேதுபதி ஜேசனிடம், ஜேசன் இந்த மாதிரியான செயலில் நீங்கள் மீண்டும் ஈடுபட்டால், பொறுத்துக்கொண்டு இருக்கமாட்டோம், அவர் இந்த வீட்டில் தேவை இல்லை. இதுபோன்ற நடத்தைக்கு ஒருத்தருக்கு எச்சரிக்கை கொடுக்கும்போது, அனைவருமே தெரிந்துகொள்ளுங்க. ஆனால் இதே தப்பை திரும்ப திரும்ப செய்தீர்கள் என்றால், நீங்கள் உலகில் தலைசிறந்த ஆட்டக்காரராக இருந்தாலும், எங்களுக்கு இந்த வீட்டில் வேண்டாம். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என கூறினார்.

இதையும் படிங்க: முற்றிலும் மாறுபட்டது…. ஓ.எம் படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? – ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!

உடனே ஜேசன், சார் எனக்கு ஒரு வேண்டுகோள், நான் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகவேண்டும் என நினைக்கிறேன் என தெரிவித்துளளார். தற்போது இது குறித்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. உண்மையிலே ஜேசன் வெளியேறிவிடுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்துவருகிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 70வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வாரத்தில் ஜேசன் போட்டியாளர்களிடம் எகிர்வதை போலவே விஜய் சேதுபதியிடமும் தனது திமிரை காட்டியிருந்தார். இதற்கு விஜய் சேதுபதி சிறப்பான எச்சரிக்கையை விடுத்திருந்தார். அந்த விதத்தில் ஜேசன் இந்த வீட்டிலிருந்து வெளியேற நினைப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சியில் யார் யார் இந்த வாரத்தில் வெளியேறுவார், ஜேசனின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us