பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப்போவது அந்த நடிகையா? வைரலாகும் தகவல்
Bigg Boss Tamil Seaon 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து வெற்றிகரமாக 10-வது வாரம் இன்றுடன் முடிய உள்ளது. இந்த நிலையில் இந்த 10-வது வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற உள்ளது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil). இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ந்து வருடம் வருடம் ஒளிபரப்பாகி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆட்டமும் போட்டியாளர்களும் மாறி மாறி வந்தாலும் மக்களின் ஆதவரவு மட்டும் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு குறையவே இல்லை என்றே சொல்லலாம். ஏன் என்றால் தற்போதைய சீசனும் சரி இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசனிலும் சரி போட்டியாளர்கள் அல்லது தொகுப்பாளர் மீது சரமாறியான குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை மட்டும் ரசிகர்கள் நிறுத்தவே இல்லை. தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டே விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 10-வது சீசனிலும் அப்படிதான் நடந்து கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 24 போட்டியாளர்கள் உடன் இந்த நிகழ்ச்சி சென்றுகொண்டு இருந்த நிலையில் இதுவரை 11 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். அதன்படி இந்த 10-வது வாரம் மொத்தம் 13 நபர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் போட்டியாளர்களாக விளையாடி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார்?
கடந்த 9-வது வாரம் தீபாவளி ஸ்பெஷலாக டபுள் எவிக்ஷனை நடத்தி பார்வையாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில் இந்த 10-வது வாரம் 13 போட்டியாளர்களின் இருந்து இன்று ஒருவர் வெளியேற உள்ளார். அவர் யார் என்றால் இத்தனை வாரங்களாக எப்படி இந்த போட்டியாளர் வெளியேறாமல் உள்ளார் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நபர் தான்.




Also Read… தனுஷின் ஓம் படத்தின் ட்ரெய்லரை கொண்டாடும் ரசிகர்கள்!
ஆம் இன்று 10-வது வார இறுதியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் நடிகை முத்தழகி வெளியேற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்றைய எபிசோட் ஒளிபரப்பாகும் போது உறுதியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பு தான் டோரதி படத்தில் நடிகை முத்தழகியின் கல்யாண விருந்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… அரசன் படத்தில் வித்யாசமான சிலம்பரசனைப் பார்ப்பீர்கள்… நடிகை பிரியங்கா மோகன்