அரசன் படத்தில் வித்யாசமான சிலம்பரசனைப் பார்ப்பீர்கள்… நடிகை பிரியங்கா மோகன்
Priyanka Mohan talks about Arasan movie | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது அரசன் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan). இவர் கடந்த 2019-ம் ஆண்டு கன்னட மொழியில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நிலையில் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களான நடிகர்கள் நானி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிசியான நடிகையாக பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன் ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் மேட் இன் கொரியா. இந்தப் படம் தமிழ் மொழியில் உருவாகி இருந்தாலும் கொரியன் மற்றும் ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. படம் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பலப் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா மோகன்.




அரசன் படத்தில் வித்யாசமான சிலம்பரசனைப் பார்ப்பீர்கள்:
இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது பிரியங்கா மோகன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, இயக்குநர் வெற்றிமாறன் சார் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு. அவருடைய அனைத்துப் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அரசன் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். அதேபோல், சிலம்பரசன் டி.ஆர். சாருடன் நான் பணியாற்றும் முதல் படம் இது.
நான் பல நாயகர்களுடன் பணியாற்றியுள்ளேன், ஆனால் அரசன் படத்தில் இருப்பது எனக்கு ஒரு மாயாஜால அனுபவமாக உள்ளது. இந்தப் படத்திற்காக, வட சென்னை வட்டார வழக்கில் நான் முதன்முறையாகப் பேசுகிறேன். சில திரைப்படங்களைப் பார்த்து, அந்த வட சென்னை பாணியிலான பேச்சைக் கற்றுக்கொண்டேன். நீங்கள் அனைவரும் நான் வட சென்னை வட்டார வழக்கில் பேசுவதைக் காணப்போகிறீர்கள். அதேபோல், முற்றிலும் மாறுபட்ட ஒரு சிலம்பரசன் டி.ஆர்.-ஐயும் நீங்கள் காண்பீர்கள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.
Also Read… பிக்பாஸ் வீட்டில் ஜுனியர் பிக்பாஸ் பதவிக்காக நடக்கும் சலசலப்பு – அனல்பறக்கும் புரோமோ வீடியோ இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#PriyankaMohan about #Arasan
– I adore Director #Vetrimaaran sir so much. I have watched all of his films, and I never imagined that I would get a chance to work with him. Being a part of Arasan is a big, big thing for me. This is also the first time I’m working with #SilambarasanTR sir.
– I have worked with many heroes, but being a part of Arasan is truly magical for me. This is the first time I’m speaking in the North Chennai style. I watched some movies and learned how to speak in the North Chennai style for this film. You all are going to see me speaking in the North Chennai style, and I’m sure you are all going to see a different SilambarasanTR. https://t.co/nbkO6DBBqi
— Movie Tamil (@_MovieTamil) November 10, 2026
Also Read… தொடங்கியது அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்!