கோவையில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு.. கடைக்குள் புகுந்த பள்ளி வேன்! காயமின்றி தப்பிய மாணவர்கள்
கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனி பகுதியில் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையோரக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினர். இன்று காலை 8 மணியளவில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகிலிருந்த கடைக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், மயக்கமடைந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவர்கள் மாற்றுப் பேருந்து மூலம் பாதுகாப்பாகப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.