AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
உணவகத்தில் குடும்பத்துடன் வந்தவர் வாடிக்கையாளரின் செல்போனை லபக்கிய நபர்! சிசிடிவியில் அதிர்ச்சி காட்சி!

Sekaran S
Sekaran S | Updated On: 10 Nov 2026 21:04 PM IST

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஆதித்யா செட்டிநாடு உணவகத்தில், குடும்பத்துடன் உணவருந்த வந்த நபர் ஒருவர், வாடிக்கையாளரின் செல்போனைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமை ஜெயக்குமார் என்பவர் நண்பருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள மேஜையில் மனைவி, குழந்தைகளுடன் அமர்ந்திருந்த நபர், உணவு முடிந்து கை கழுவிவிட்டுத் திரும்பியபோது ஜெயக்குமாரின் மேஜையில் இருந்த செல்போனை நைசாக எடுத்துப் பின்பாக்கெட்டில் மறைத்துச் சென்றுள்ளார்.

சாப்பிட்டு முடித்த ஜெயக்குமார் செல்போனைக் காணாமல் அதிர்ச்சியடைந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் திருட்டுச் சம்பவம் பதிவாகியிருந்தது. இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரைத் தேடி வருகின்றனர்.

Published on: Nov 10, 2026 09:04 PM
Follow Us