AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
100 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம்.. வடசித்தூரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட மயிலம் தீபாவளி!

100 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம்.. வடசித்தூரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட மயிலம் தீபாவளி!

Sekaran S
Sekaran S | Published: 10 Nov 2026 21:06 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூர் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் மயிலம் தீபாவளி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்தத் திருவிழா, தீபாவளிக்கு மறுநாள் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இக்கிராமத்தில் பிறந்து வெளியூர்களில் வசிக்கும் பெண்கள், தீபாவளியன்று தங்களது பிறந்த வீட்டுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடுவது இதன் தனிச்சிறப்பாகும்.

திருவிழாவையொட்டி ராட்டினங்களில் ஏறியும், பாரம்பரிய கண்ணாடி கொத்து வளையல்கள் அணிந்தும், அச்சு மருதாணி வைத்தும் பெண்கள் மகிழ்ந்தனர். பட்டாசுகள் வெடிப்பதற்குப் பதிலாக உறவினர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஒன்றிணைந்து கொண்டாடிய இந்த விழா, ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது.

Follow Us