Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
TVK Party

TVK Party

கோலிவுட்டில் உச்சபட்ச நடிகராக இருப்பவர் விஜய். இவர் 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் கொடுத்தது. இதனை அடுத்து, 2024 ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இறங்கினார். அதாவது, கட்சி தொடங்கிய ஓராண்டிற்குள் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு, செயற்குழு கூட்டம், இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என அதிரடியாக நடத்தி முடித்தார் விஜய். குறிப்பாக, தங்கள் கட்சியின் நிலைபாட்டை எடுத்துரைத்த விஜய், தன்னுடைய கொள்கை எதிரி பாரதிய ஜனதா கட்சி என்றும் அரசியல் எதிரி திராவிட முன்னேற்ற கழகம் என்றும் அனைத்து மேடைகளிலும் கூறி வருகிறார். மேலும், திமுக மற்றும் பாஜகவை விமர்சித்தும் வருகிறார். அடுத்ததாக 2026 தேர்தலுக்கு கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார்

Read More

யாருக்காக இந்த ஆட்சி? – தமிழக அரசை கேள்வி எழுப்பிய விஜய்

TVK Vijay: சென்னை - திருத்தணி புறநகர் ரயிலில் வடமாநில தொழிலாளர் ஒருவர் 4 சிறுவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட விஜய், யாருக்காக இந்த ஆட்சி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு…சிபிஐ விசாரணை வளையத்தில் வருகிறாரா விஜய்!

Vijay Will Appear In CBI Inquiry?: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவின் கூட்டணி கணக்கு…4 கட்சிகளுக்கு குறி…விஜய் அமைக்கும் வியூகம்!

Tvk Leader Vijay Targets 4 Parties For Alliance : 2026 சட்ட மன்ற தேர்தலில் வலிமையுடன் போட்டியிடுவதற்காக 4 முக்கிய கட்சிகளை தனது கூட்டணியில் இணைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது .

விஜய்க்கு அவ்வளவு தைரியமா…தவெகவினருக்கு நாவடக்கம் தேவை…செல்லூர் ராஜூ ஆவேசம்!

Former AIADMK Minister Sellur Raju Criticizes Vijay : அதிமுக பற்றி பேசுவதற்கு விஜய்க்கு அவ்வளவு தைரியம் வந்து விட்டதா என்றும், அந்தக் கட்சியினருக்கு நாவடக்கம் தேவை என்றும் அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார் .

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு:சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள்…அடுத்து என்ன!

Tvk Executives Present At CBI Office: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெகவில் இணையும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் – செங்கோட்டையன் சொன்ன தகவல்

TVK Alliance : ஈரோடு மாவட்டத்தில் தவெக சார்பில் புதிய கட்சி அலுவலகம் டிசம்பர் 28, 2025 அன்று திறக்கப்பட்டது. கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்த செங்கோட்டையன், கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணையவிருப்பதாக பரவும் தகவலுக்கு விளக்கமளித்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.

விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் கைது – காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்

Thalapathy Vijay's Jana Nayagan Audio Launch: மலேசியாவில் நடைபெற்று வரும் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

டிவிகே டிவிகே என வந்த சத்தம்… இங்க வேணாம் நண்பா…. ரசிகர்களை கட்டுப்படுத்திய விஜய்

Jananayagan Audio Launch: விஜய்யின் கடைசி படமான ஜனநயாகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27, 2025 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாகந நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் தவெக என சத்தமிட அவர்களை தன் ஸ்டைலில் விஜய் அமைதிப்படுத்தினார்.

தவெக போட்டியிடும் சின்னம் எது தெரியுமா? வெளியானது முக்கிய அப்டேட்…கட்சியினர் குஷி!

Election Commission Allotted Whistle Symbol To TVK: தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சின்னத்தை ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக கேட்ட சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்சியினர் மிகுந்த குஷியில் உள்ளனர்.

தவெகவுடன் கூட்டணி வைக்கப்போவது யார்..? செங்கோட்டையன் விளக்கம்!

தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின்போது, “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும் என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை” என்று தெரிவித்தார்.

தவெக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

TVK Vijay: தனது கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கவில்லை எனக் கோரி தூத்துக்குடியை சேர்ந்த அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ்…உறுதி செய்த செங்கோட்டையன்?

AIADMK Key Points Will Soon Be Merged Tvk : அதிமுகவின் மிக முக்கிய புள்ளிகள் மற்றும் ஓபிஎஸ் அணி விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அந்தக் கட்சியின் தலைமை நிர்வாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார் .

பழைய பேனா பகடி செய்து சிரிக்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் பதில்

TVK Vijay : அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய், வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும் என தன் கட்சித் தொண்டர்களுக்கு உத்ரவிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

மதச்சார்பின்மையில் முரண்பாடு.. திமுகவிற்கு எதிராக சரத்குமார் கருத்து!

திமுகவை விமர்சித்த சரத்குமார், ”கிறிஸ்துமஸ் கொண்டாடியும், தீபாவளி மற்றும் பிற இந்து பண்டிகைகளில் பங்கேற்பதைத் தவிர்த்தும், மதச்சார்பின்மை பற்றிப் பேசுவது முரண்பாடாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற விரும்பும் பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சினையில் ஒரு நேர்மறையான தீர்வு காணப்படும்”என்று தெரிவித்தார். 

தவெக அலுவலகம் முன்பு அஜிதா உண்ணாவிரதம் – பின் வாசல் வழியாக வெளியேறிய ஆனந்த் – பரபரப்பு சம்பவம்

TVK Vijay: தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி அஜிதா தனது ஆதரவாளர்களுடன் தவெக தலைமை அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரைத் தவிர்க்கும் பொருட்டு தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் பின் வாசல் வழியாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.