அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி உயிரிழந்த சம்பவத்தில், அவரது குடும்பத்துடன் 29 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 23 வயதான ஜானவி கண்டுலா, கடந்த 2023 ஆம் ஆண்டு சாலையை கடந்தபோது அதிவேகத்தில் வந்த போலீஸ் வாகனம் மோதியதில் உயிரிழந்தார். அவரை மோதிய அதிகாரி கேவின் டேவ், 40 கிலோமீட்டர் வேக வரம்புள்ள பகுதியில் 119 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அவசர அழைப்புக்கு சென்று கொண்டிருந்ததாகவும், எமர்ஜென்சி விளக்குகள் மற்றும் சைரன் பயன்படுத்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.