பீகார் மாநிலத்தில் போலீஸ் தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து, அவரின் விருப்பமின்றி திருமணம் செய்து வைக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள வீடியோவில், அவர் முழுமையாக மயக்க நிலையில் இருப்பது காணப்படுகிறது. இந்த சம்பவம், பீகாரில் நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் கட்டாய திருமண மரபை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.