பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் மூலம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல் குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மும்பை போலீசார் தெரிவித்ததாவது, நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட வாய்ஸ் நோட்டில், பெரும் தொகை தருமாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், மிரட்டல் செய்தியை அனுப்பிய நபரை போலீசார் தேடி வருவதாகவும் கூறினர்.