Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி

இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் மகா சிவராத்திரி (mahashivratri) ஆகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு ஒருநாள் முன்னதாக வரும் 14வது நாள் மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் 12 முதல் 13 சிவராத்திரிகள் வரும். அவை அனைத்தையும் விட, மகா சிவராத்திரி என்று அழைக்கப்படும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் முக்கியமானது. மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதி இந்துக்களால் மகா சிவராத்திரி என கொண்டாடப்படுகிறது. பார்வதி தேவி சிவனை வழிபட்டு இரவு முழுவதும் பூஜை நடத்தி வழிபட்ட நாளையே சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது என்று கூறப்படுகிறது. அன்றைய நாளில் சிவனை வழிபடுவதன் மூலம் வேண்டிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதிகம். நாடு முழுவதும் சிவாலயங்களில் பக்தர்களால் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் சிவ பக்தர்கள் விரதமிருந்து சிவபெருமானை துதித்து அன்றைய இரவு முழுவதும் கண்விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். குறிப்பாக படைத்தல், பாதுகாத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றின் தெய்வீக நடனமான தாண்டவத்தை சிவபெருமான் நிகழ்த்தும் இரவு, மகா சிவராத்திரி என்றும் நம்பப்படுகிறது.

Read More

மகா சிவராத்திரி 2026.. வீட்டில் எளிய முறையில் கால ஜாம பூஜை செய்வது எப்படி?

Maha Shivaratri 2026: இந்த வருடம் மகா சிவராத்திரி 2026 ஆம் ஆண்டு, பிரபரி மாதம் 15ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தமிழில் மாசி மாதம் 3ஆம் தேதி வருகிறது. மகா சிவராத்திரி அன்று, அதிகாலை பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து, நீராடி, திருநீறு அல்லது விபூதி அணிந்து, சிவபெருமானை வழிபட்டு விரதத்தை தொடங்கலாம்.