நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவான மேட் இன் கொரியா திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கிய ஆர் கார்த்திக் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் கனவுடன் தென் கொரியாவின் சியோல் நகரத்திற்கு பயணம் செய்வது தான் இந்த படத்தின் மையக் கதை.