இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்துடன் தொடர்புடைய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, இந்திய மதிப்பில் 2 கோடிக்கு பாகிஸ்தான் ஸ்பின்னர் அப்ரார் அஹமத்தை ஏலத்தில் வாங்கியுள்ளது.