மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?
Special Buses for Maha Shivaratri : தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 15, 2026 அன்று மகா சிவராத்திரி கொண்டாடடப்படவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 4 நாட்களுக்கு இயக்கப்படவுள்ள நிலையில், எந்தெந்த ஊர்களுக்கு இயக்கப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
சென்னை, பிப்ரவரி 11 : மகாசிவராத்திரி பண்டிகை வருகிற பிப்ரவரி 15, 2026 அன்று கொண்டாடப்படவிருக்கிறது. மேலும் இந்த ஆண்டு மகாசிவராத்திரி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வழக்கத்தை விட பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் ஊர்களுக்கு செல்லும் பயணிகளும் இதனால் பாதிக்கப்படுவர். இந்த நிலையில் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவ செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் பிப்ரவரி 12, 2026 வியாழக்கிழமை தொடங்கி, பிப்ரவரி 15, 2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நான்கு நாட்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் வார இறுதி நாட்களிலும், திருவிழா மற்றும் சுப தினங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடும் நெரிசலை சந்தித்து வருகின்றனர். முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு பேருந்துகளில் இடம் கிடைப்பது சிரமமான காரியமாக உள்ளது. இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு 4 நாட்கள் சிறப்புகள் இயக்கப்படவுள்ளன.
இதையும் படிக்க : மத்திய அமைச்சர் பதவி கேட்கும் தேமுதிக?.. பேச்சுவார்த்தை நடத்தும் பாஜக.. திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன தகவல்!!




அதன் படி பிப்ரவரி 12, 2026 அன்று வியாழக்கிழமை, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பிப்ரவரி 13, 2026 அன்று வெள்ளிக்கிழமை 500 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.
மகாசிவாத்திரி மற்றும் வார இறுதி நாட்கள் முடிந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு விவரம்
சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் அதிக அளவில் முன்பதிவு செய்துள்ளனர். பிப்ரவரி 13, 2026 வெள்ளிக்கிழமை மட்டும் 690 பயணிகளும், பிப்ரவரி 14, 2026 அன்று சனிக்கிழமை 5,364 பயணிகளும், பிப்ரவரி 15, 2026 ஞாயிற்றுக்கிழமை 10,128 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் அதற்கேற்ப திட்டமிட்டு பயணம் செய்யுமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க : பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ.. பாதுகாப்பு கமிஷ்னரின் ஆய்வு இன்று தொடக்கம்!
சிவராத்திரியை முன்னிட்டு அதிக அளவில் மக்கள் கோவில்களுக்கு செல்வர் என்பதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சிவராத்திரி மற்றும் வார இறுதி விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் பயணிகளுக்காக தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.