ஈரான் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரகசியமாக வேறு ஒரு ராணுவ விமானத்தில் துருக்கியில் இருந்து பிரிட்டன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டிரம்ப் துருக்கி சென்றிருந்தார். அப்போது, கத்தார் வழங்கிய புதிய விமானத்தில் அவர் பயணம் செய்தார். ஆனால், துருக்கியில் இருந்து புறப்படும் போது எதிர்பாராத விதமாக பழைய Air Force One விமானத்தை பயன்படுத்தினார்.