கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 169 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சோகோ மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணிக்கு 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 103 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மேற்கு கொலம்பியாவின் பல நூறு கிலோமீட்டர் தொலைவுக்கும் உணரப்பட்டன.