திருவண்ணாமலை தீபம்.. சிறப்பு பேருந்துகளை அறிவித்த தமிழக அரசு போக்குவரத்து கழகம்!
Special Bus Services to Tiruvannamalai | திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கியுள்ளது. இதேபோல பவுர்ணமியும் வரவுள்ளது. இதன் காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை, நவம்பர் 25 : திருவண்ணாமலை (Tiruvannamalai) அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா நேற்று (நவம்பர் 24, 2025) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த கார்த்திகை தீப திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான அதிகாலை பரணி தீபம் மற்றும் மாலை அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு டிசம்பர் 03, 2025 அன்று நடைபெற உள்ளது. இதற்காக உலகம முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் நாகர்கோவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அதிநவீன சொகுசு பஸ் இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய ஏசி பேருந்துகள் ஆகியவை நவம்பர் 02, 2025 மற்றும் நவம்பர் 03, 2025 அன்று ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க : நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை
160 அதிநவீன குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இயக்கம்
கார்த்திகை தீப திருவிழாவை போலவே திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சுமார் 160 அதிநவீன குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, குளிர்சாதன வசதி இல்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய விரைவு பேருந்துகளும் நவம்பர் 03, 2025 மற்றும் நவம்பர் 04, 2025 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பாக இயப்பட்ட உள்ளன.
இதையும் படிங்க : கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்வது எப்படி?
கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் பயணம் செய்யலாம்.
அதற்கு அரசின் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc official app ஆகியவற்றின் மூலம் நீங்கள் உங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.