கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஒரே இரவில் செல்லாது என அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடம் தெரியாமல் சேமித்து வைத்திருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுகளை தற்போது கண்டுபிடித்த பெண் ஒருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.