நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. அதில் 1.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளார்.