AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தயாரான தேர்தல் அறிக்கை.. இன்று பனையூரில் நடக்கும் தவெக ஆலோசனை கூட்டம்..

சமீபத்தில் சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 4ஆம் தேதி தஞ்சையில் கூட்டம் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே ஆயச்சம்மைப்பட்டியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தலைவர் விஜய் சந்திக்க உள்ளார். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடைபெறும்.

தயாரான தேர்தல் அறிக்கை.. இன்று பனையூரில் நடக்கும் தவெக ஆலோசனை கூட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 03 Mar 2026 07:33 AM IST

சென்னை, மார்ச் 3, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டம் இன்று பனையூரில் உள்ள தாவிகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றி கழகத்தைப் பொருத்தவரையில், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் முதல் தேர்தல் களமாகும். இதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மாவட்டந்தோறும் நடக்கும் தவெக நிர்வாகிகள் கூட்டம்:

தேர்தலை முன்னிட்டு, கட்சித் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து வந்தார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு மக்கள் சந்திப்பு கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதால், மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நிர்வாகிகள் கூட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..

சமீபத்தில் சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 4ஆம் தேதி தஞ்சையில் கூட்டம் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே ஆயச்சம்மைப்பட்டியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தலைவர் விஜய் சந்திக்க உள்ளார். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடைபெறும்.

தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம்:

நேற்று சென்னை செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்தன், வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும், அதுவரை காத்திருக்காமல் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தேர்தல் அறிக்கை முழுமையாக தயாராகி உள்ளதாகவும், இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் தேர்தல் அறிக்கை குழுவினர் ஆருண்ராஜ், ஜே.சி.பி. பிரபாகர், ராஜ்மோகன், மயூரி சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் படிக்க: இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. கோவில்களில் மாலை நடை சாத்தப்படுகிறது..

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான இலவச அறிவிப்புகள் குறைவாகவும், பொருளாதார முன்னேற்றத்தை மையப்படுத்திய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us