தீபாவளி சிறப்பு கண்காட்சி.. சென்னையில் 3 நாள்கள் நடக்கிறது.. என்னென்ன ஷ்பெஷல் தெரியுமா?
Chennai Special Exhibition : தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயார் செய்த பொருள்கள் சிறப்பு கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில், பொது மக்கள் பங்கேற்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது .
தீபாவளியையொட்டி, சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்யும் பொருட்களின் சிறப்பு விற்பனை கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சுய உதவி குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றின் பயனாக சுய உதவி குழுவினர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இருந்து வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பும் பெற்று வருகின்றனர். சுய உதவி குழுவினர் தயாரிக்கும் பொருள்கள் கிராமப்புறங்களில் மட்டும் இன்றி நகரப் பகுதிகளிலும் வசிக்கும் அனைத்து தரப்பு நிறையும் சென்றடைய வேண்டும். அதற்காக சுய உதவி குழுவினரின் தயாரிப்பு பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் தயார் செய்யும் பொருள்கள்
இதற்காக மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சியை தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்யும் பொருட்களின் தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.
மேலும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்கனும்.. ரூ. 15 கோடி தரோம் அதிமுகவுக்கு வாங்க.. முஸ்தபா எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!




3 நாள்கள் நடைபெறும் சிறப்பு கண்காட்சி
இந்த கண்காட்சியானது இன்று புதன்கிழமை தொடங்கி வருகிற 6- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனை கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுவினர் தயார் செய்த
- பட்டு ஆடைகள்.
- பருத்தி ஆடைகள்.
- சுவையான தின்பண்டங்கள்.
- செயற்கை ஆபரணங்கள்.
- இயற்கை சார்ந்த பொருட்கள்.
- சிறு தானியங்கள்.
- அரிசி வகைகள்.
- சிறு தானிய மதிப்பு கூட்டு பொருள்கள்.
- பழ வகைகள்.
- காய்கறிகள்.
- பனை பொருட்கள்.
- கீரைகள்
கண்காட்சியில் பல்சுவை உணவு பொருள்கள்
ஆகிய இயற்கை சார்ந்த பொருள்கள் தரமானதாகவும், சரியான விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்களும் கிடைக்கும். பொதுமக்கள் அனைவரும் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியே பார்வையிட்டு, தரமான உற்பத்தி பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இலங்கைக்கு கடத்தல் முயற்சி! 1.9 கோடி ஹஷிஷ் பறிமுதல்.. கஞ்சாவை விட பல மடங்கு சர்வதேச மதிப்பு.. ராமநாதபுரத்தில் போலீசார் அதிரடி!