AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக ஆட்சியை கவிழ்க்கனும்.. ரூ. 15 கோடி தரோம் அதிமுகவுக்கு வாங்க.. முஸ்தபா எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!

MLA Mustafa Latest Speech : தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்ப்பதற்காக தன்னிடம் அதிமுக, திமுகவை சேர்ந்தவர்கள் ரூ. 15 கோடி தருவதாக கட்சி மாறி வருமாறு தெரிவித்ததாக மதுரை மத்திய மாவட்ட தவெக எம்எல்ஏ முஸ்தபா பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தவெக ஆட்சியை கவிழ்க்கனும்.. ரூ. 15 கோடி தரோம் அதிமுகவுக்கு வாங்க.. முஸ்தபா எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!
முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 04 Nov 2026 16:12 PM IST

மதுரை விமான நிலையத்தில் தவெகவின் மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை திமுக அரசு மூடியதை பார்த்தோம். ஆனால், மக்களுக்கு தேவையான திட்டங்களை அதே பெயரில் தற்போதைய முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மீண்டும் செயல்படுத்தி வருகிறார். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக, மீண்டும் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். எனக்கும் அதிமுகவை சேர்ந்தவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ. 15 கோடி தருகிறோம் என்றும், நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு கொண்டு வரும்போது அந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிடம் புகார் அளித்துள்ளேன்.

ரூ.100 கோடி கொடுத்தாலும் தவெகவினர் கட்சி மாறமாட்டார்கள்

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு பதிவு தொடர்பான விவகாரத்தில் தற்போது மீண்டும் அதிமுகவினர் செயல்படுகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த அதிமுகவினர் என்னை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். தமிழக வெற்றிக் கழக அரசை தவிர்ப்பதற்கு அதிமுகவும், திமுகவும் இணைந்து தான் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறது. ரூ. 100 கோடி கொடுத்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாற மாட்டார்கள். இது தொடர்பாக, தவெக தலைமையிடம் தெரிவித்துள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்த தகவல் வெளிவரும்.

மேலும் படிக்க: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசு குழுவிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த தவெக

ஏற்கெனவே, 35 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் நின்றது. அதிமுக பக்கம் யாரும் வரவில்லை. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் மக்களுடன் கூட்டணி அமைத்து தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 34 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போது, தமிழக மக்கள் வரவேற்பும், எழுச்சியும் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி திரும்பி உள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதால் அதிக அளவிலான வாக்கு சதவீதம் பெற வாய்ப்பு உள்ளது என்று எம். எல். ஏ. முஸ்தபா தெரிவித்தார்.

மீண்டும் தவெக எம்எல்ஏவிடம் பேரம்

ஏற்கனவே, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த போது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் கட்சி மாறுவதற்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டது. இந்த விவகாரத்தில், திமுக ஆதரவாளர்கள் என்று கூறப்படும் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தால் ரூ.10.. அறிமுகமாகும் தானியங்கி இயந்திரம்!

Follow Us