AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

450 டன் வெங்காயம் வீண்! விலையேற்றதால் மக்கள் கண்ணீர்.. கவலையின்றி இடைத்தேர்தல் பணியில் 24-ஆம் புலிகேசி.. உதயநிதி காட்டம்!

Udhayanidhi Criticized TVK Government : தமிழக தேவைக்காக மகாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 450 டன் வெங்காயம் கெட்டுப்போன நிலையில், தவெக அரசை எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

450 டன் வெங்காயம் வீண்! விலையேற்றதால் மக்கள் கண்ணீர்.. கவலையின்றி இடைத்தேர்தல் பணியில் 24-ஆம் புலிகேசி.. உதயநிதி காட்டம்!
உதயநிதி , முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 04 Nov 2026 14:42 PM IST

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெங்காயம் விநியோகம் செய்வதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சுமார் 450 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. அவை தரமற்ற நிலையில் அழுகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தமிழக அரசை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிற கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களை கொள்முதல் செய்ய தெரிந்த டம்மி முதல்வருக்கு, வெங்காயம் கொள்முதல் செய்ய தெரியாதா. உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாத வெங்காயம்தான் இந்த சோப்ளாங்கி அரசு என்பதற்கு கூட்டுறவுத் துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி. ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வு மேற்கொள்ளாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடமிருந்து மூடர் கூட்டம் அரசு வாங்கியுள்ளது.

கெட்டுப்போன் வெங்காயத்தை கவர் அப் செய்த அரசு

மகாராஷ்டிராவில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்ட அந்த வெங்காயம் தரமற்ற முறையில் இருந்ததன் காரணமாக அவை கவர் அப் செய்வதற்காக கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டு விட்டார்கள். சர்க்கஸ் ஆட்சியைப் போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை குறுக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இருக்கும் வெங்காயத்துக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசே பேக் நியூஸ் பெட்லராக மாறி அப்யூசிவ் வாரியர்ஸ்க்கு டஃப் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க: முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு தீபாவளி இலவச வேட்டி, சேலை – ரேஷன் கடைகளில் நவ. 7 வரை விநியோகம்

கோமாளி கூட்டத்தை நம்பாமல் உஷாரான திருச்சி வியாபாரிகள்

அதோடு மட்டும் இன்றி வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக லாரி மூலம் ஏற்றி அனுப்பி உள்ளனர். இந்த கோமாளி கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வியாபாரிகள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்து உள்ளனர். தற்போது, அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று தெரியாமல் லாரி ஓட்டுநர்கள் கதறி கொண்டுள்ளனர். அத்துடன், தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியான் 24- ஆம் புலிகேசி

இது தொடர்பாக, தவெக அரசும், டம்மி முதல்வரும் எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் 24- ஆம் புலிகேசி. இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார். ? அதற்குப்பின் அழுகிய வெங்காயத்தை மறைக்கிய புழு குனி ஆட்டம் ஆடியவர் யார். ஏற்கனவே ரேசன் கடைகளில் 30 ரூபாய்க்கு பொன்னி அரிசி வழங்குவதாக கூறிவிட்டு டெண்டர் விடாமல் வழக்கமான ரேஷன் அரிசியே பாலிஷ் போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு எப்போது பதில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

Follow Us