மதுரை மத்திய சிறையில் போலீஸ் மீது கைதி திடீர் தாக்குதல் – பரபரப்பு தகவல் – என்ன நடந்தது?
Madurai Central Prison Attack : மதுரை மத்திய சிறையில் சந்தேகத்தின் பேரில் கைதியிடம் காவலர் விசாரணை நடத்தியபோது, கைதி காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தற்போது சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மதுரை, நவம்பர் 4 : மதுரை மத்திய சிறையில் (Madurai Central Prison) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை கைதி ஒருவர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைதியிடம் காவலர் விசாரணை நடத்தியபோது, கைதி காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழந்த காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தற்போது சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் நடந்த சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்
தேனி மாவட்ட சிறையில் கடந்த அக்டோபர் 26, 2026 அன்று இரவு நடைபெற்ற சம்பவம் சிறைத்துறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் சென்றனர். ஒரே நேரத்தில் 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : கடலூரில் ஆயிரக்கணக்கான கோழிகள் திடீர் உயிரிழப்பு.. கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை!




பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தப்பிச் சென்ற அனைத்து கைதிகளும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்ர். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் சிறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியது.
மதுரை மத்திய சிறையில் பாதுகாப்பு அதிகரிப்பு
தேனி மாவட்ட சிறையில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த சிறைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.அதன்படி, மதுரை மத்திய சிறையிலும் கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளுடன், கைதிகளின் செயல்பாடுகளையும் சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக, சிறையின் முக்கிய நுழைவாயில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறைக்குள் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட மதுரை மத்திய சிறையில் காவலர் ஒருவர் கைதியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு
கைதியிடம் விசாரணை
மதுரை மத்திய சிறையில் திருட்டு வழக்கு ஒன்றில் இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கைதியின் நடவடிக்கையில் காவலர் ஒருவருக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர், சம்பந்தப்பட்ட கைதியிடம் அவரது செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தியதாகவும், அப்போது காவலர் எழுப்பிய கேள்விகள் கைதிக்கு கோபத்தையும் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கைதி, எதிர்பாராத விதமாக காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.