முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு தீபாவளி இலவச வேட்டி, சேலை – ரேஷன் கடைகளில் நவ. 7 வரை விநியோகம்
Free Sarees for Pensioners : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கான விலையில்லா வேட்டி, சேலைகள், நியாய விலைக் கடைகளில் 2026 நவம்பர் 3 முதல் நவம்பர் 7, 2026 வரை இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, நவம்பர் 4 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கான விலையில்லா வேட்டி, சேலைகள், நியாய விலைக் கடைகளில் 2026 நவம்பர் 3 முதல் நவம்பர் 7, 2026 வரை இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் குடும்ப அட்டையுடன் சென்று அவர்களுக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் (Ration Shop) இலவச வேட்டி சேலையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் திட்டம்
முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு, ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகையையொட்டி, நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகளைத் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் நவம்பர் 3, 2026 முதல் நவம்பர் 7, 2026 வரை பயனாளிகள் வழக்கமாகப் பொருள்கள் வாங்கும் தங்கள் பகுதி நியாய விலைக் கடையில் இலவச வேட்டியை பெற்றுக்கொள்ளலாம். முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையுடன் நேரில் சென்று வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.




இதையும் படிக்க : 20 ஆண்டு கால சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேர் விடுதலை
இந்தத் திட்டம் எந்தத் தாமதமும் இன்றிச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், நியாய விலைக் கடைகளுக்குப் பொருள்களை அனுப்புதல், பயனாளிகளுக்கு விநியோகித்தல் ஆகிய பணிகளைக் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். இதற்காக வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை அதிரடி ரத்து – என்ன காரணம்?
அதிகாரிகள் கண்காணிப்புடன் செயல்படும் திட்டம்
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் எந்த வித தடையும் இல்லாமல் செயல்பட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். நியாய விலைக் கடைகளுக்கு வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்படுவது முதல் பயனாளிகளுக்கு அவை முறையாக விநியோகம் செய்யப்படுவது வரை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் 3, 2026 அன்று முதல் நவம்பர் 7, 2026 சனிக்கிழமை வரை தங்களது நியாய விலைக் கடைகளுக்கு சென்று தீபாவளிக்கான இலவச வேட்டி, சேலைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.