திடீர் பிரசவ வலி.. ஆம்புலன்ஸில் குழந்தை பெற்ற பெண்.. சிவகங்கையில் சுவாரஸ்யம்!
Girl Baby Born In Ambulance | சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்தபோது பெண்ணுக்கு பிரச வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவ உதவியாளர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் உதவியுடன் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிங்கம்புணரி, நவம்பர் 04 : சிவகங்கையில் (Sivagangai) பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணி ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்கு முன்னதாகவே குழந்தை வெளியே வர தொடங்கிய நிலையில், மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இருவரும் இணைந்து பாதுகாப்பாக இந்த பிரசவத்தை செய்துள்ளனர். இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்துள்ளது. அதன் காரணமாக அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அந்த ஆம்புலன்ஸை குமரவேல் என்ற நபர் ஓட்டிச் சென்ற நிலையில், மருத்துவ உதவியாளர் ரோஸி உடன் சென்றிருந்தார்.
இதையும் படிங்க : 20 ஆண்டு கால சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேர் விடுதலை




ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
ஆம்புலன்ஸில் சென்றுக்கொண்டு இருந்தபோதே அந்த பெண்ணுக்கு கடுமையான பிரச வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலவரத்தை உணர்ந்த மருத்துவ ஊழியர் ரோஸி, அந்த பெண்ணுக்கு பிரசவம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஓட்டுநர் குமரவேல் அதற்கு ஏற்ப ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி உதவி செய்துள்ளார்.
இதையும் படிங்க : 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை அதிரடி ரத்து – என்ன காரணம்?
தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்
இந்த நிலையில் தான், அந்த பெண்ணுக்கு ஆம்புனல்ஸில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு தாயும், சேயும் தேவையான முதலுதவி வழங்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பாதுகாப்பாக பிரசவம் செய்த மருத்து உதவியாளர் ரோஸி மற்றும் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மருத்து உதவியாளர் ரோஸி இதுவரை சுமார் 58 பிரசவங்களை இவ்வாறு பாதுகாப்பாக கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.