IPL 2027: மும்பைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா சூர்யகுமார் யாதவ்..? இன்ஸ்டாவில் போஸ்ட்!
Suryakumar Yadav Transfer Rumors: ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் வேறு அணிக்கு மாறவிருப்பதாக வதந்திகள் பரவின. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் பொறுப்பு குறித்து பேசப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஐபிஎல் 2027 சீசனுக்கான (IPL 2027) ஏலம் வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி கோவாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அதன்படி, ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் வருகின்ற 2026 நவம்பர் 17ம் தேதிக்குள் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதன்போது பரிமாற்ற வதந்திகளால் மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) அடிக்கடி விவாதங்களில் ஈடுபட்டு வருகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பஞ்சாப் கிங்ஸ் அணிக்குச் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்பு சூர்யகுமார் யாதவ் மற்றொரு அணிக்கு மாற்றப்படலாம் என்றும் சில செய்திகள் தெரிவித்தன. இருப்பினும், சூர்யாவே ஒரு பதிவின் மூலம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ALSO READ: ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ்..? ஹர்திக் எதிர்காலம் என்ன..?




சூர்யகுமார் யாதவ் பதிவு என்ன?
View this post on Instagram
சூர்யகுமார் யாதவ் ஒரு புதிய அணியில் இணையக்கூடும் என்ன செய்தி பல நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பரிசீலிக்கப்பட்டு வந்தார். முன்னதாக, அதிக விலைக்கு வாங்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கடந்த ஐபிஎல் 2026 சீசனின் முடிவில் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு திரும்பினார்.
இந்த வதந்திகளுக்கு மத்தியில், சூர்யகுமார் யாதவ் ஒரு பதிவின் மூலம் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து எங்கும் செல்லப் போவதில்லை என்பதும், ஐபிஎல் 2027-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் முகாமில் தான் பயிற்சி செய்யும் வீடியோவை நேற்று முன் தினம் அதாவது 2026 நவம்பர் 2ம் தேதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதற்கு, “மீண்டும் உற்சாகத்தில்!” என்று தலைப்பிட்டிருந்தார். மேலும், சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸைக் குறிக்கும்) ஒரு நீல நிற ஹார்ட்டின் ஈமோஜியையும் பகிர்ந்திருந்தார். அவரது மனைவி தேவிஷன் ஷெட்டியும் கருத்துப் பகுதியில் ஒரு நீல ஹார்ட்டினை பகிர்ந்திருந்தார்.
ALSO READ: ஐபிஎல் 2027 ஏலத்தில் பங்கேற்பா..? மறுத்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்!
சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர் ஆவார். இவர் 2012-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமானார். பின்னர், சூர்யா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குச் சென்றார். அங்கு நான்கு சீசன்கள் விளையாடிய பிறகு, 2018-ல் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பினார். அன்று முதல் சூர்யகுமார் யாதவ் அதே அணிக்காகவே விளையாடி வருகிறார்.