IPL 2027: ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ்..? ஹர்திக் எதிர்காலம் என்ன..?
Rohit Sharma Returns MI Captain: ஐபிஎல் 2027 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா மீண்டும் நியமிக்கப்படவுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி தோல்வியடைந்ததால், அணி நிர்வாகம் மீண்டும் ரோஹித் மீது நம்பிக்கை வைத்துள்ளது. 5 முறை கோப்பை வென்ற ரோஹித்தின் அனுபவம் அணிக்கு பலம் சேர்க்கும். கீரன் பொல்லார்ட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித்தின் பரிந்துரையும் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2027 (IPL 2027) தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியிடமிருந்து ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஐபிஎல் 2024-க்கு முன்பு, அனுபவம் வாய்ந்த வீரரான ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், தொடர்ச்சியாக 3 சீசன்களில் மோசமாக விளையாடியதால், மும்பை அணி நிர்வாகம் தற்போது ஹர்திக் மீது நம்பிக்கையை இழந்துள்ளது. மும்பை அணி மீண்டும் ரோஹித் சர்மா மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்தப் பொறுப்பிற்கு ரோஹித் மற்றொரு வீரரின் பெயரைப் பரிந்துரைத்திருந்தார்.
ALSO READ: மும்பை பேட்டிங் பயிற்சியாளராக உத்தப்பா.. களம் காணும் புதிய பயிற்சிக் குழு!
3 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மா அணியின் பொறுப்பை ஏற்கிறார். கேப்டனாக யாரை நியமிக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் அவரிடம் கருத்து கேட்டபோது, அந்த அதிரடி வீரர் திலக் வர்மாவின் பெயரைப் பரிந்துரைத்திருந்தார். ரோஹித் சர்மா 10 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார். 2013-ல் ரோஹித் சர்மா அணியின் பொறுப்பை ஏற்றபோது, அந்த அணி ஒரு கோப்பையைக்கூட வென்றிருக்கவில்லை. அதன்பிறகு, ரோஹித் சர்மா கேப்டன் ஆன உடனேயே அற்புதமாகச் செயல்பட்டதால், அணி தனது முதல் ஆண்டிலேயே சாம்பியன் ஆனது.




ரோஹித் சர்மா 10 ஆண்டுகள் அணியை வழிநடத்தினார். அதில், இவரது தலைமையிலான மும்பை அணியை 5 முறை சாம்பியனாக்கினார். அவரது கேப்டன்சியின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பட்டத்தை வென்றது. ரோஹித் 2013 முதல் 2023 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இருப்பினும், 2020-க்குப் பிறகு, அந்த அணியின் அதிர்ஷ்டம் முடிவுக்கு வந்தது போல் தோன்றியது. ரோஹித் சர்மா 3 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் 2023 வரை மும்பை அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இதனை தொடர்ந்து, இந்தப் பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மும்பை அணி நிர்வாகம் உணர்ந்தபோது, ஹர்திக் பாண்ட்யாவிடம் பொறுப்பை கொடுத்தது, இதன்பிறகு, ஹர்திக் பாண்ட்யா மூன்று ஆண்டுகள் கேப்டனாகவும் இருந்தார். ஆனால், முடிவுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 6 ஆண்டுகளில் ஒரு ஐபிஎல் பட்டத்தைக் கூட வென்றதில்லை. இப்போது, 2026-ல் ஒரு இளம் வீரரையோ அல்லது உலக சாதனை படைத்த கேப்டன் சூர்யகுமார் யாதவையோ நாடாமல், அந்த அணி நிர்வாகம் மீண்டும் ரோஹித் ஷர்மாவை நாடுகிறது. அவரால் பட்டத்தை வெல்ல முடியுமா என்பதையும், எத்தனை ஆண்டுகளுக்கு ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார் என்பதையும் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
ALSO READ: ஹர்திக்கை பரிமாற்றம் செய்ய திட்டமிடும் மும்பை..? அஸ்வின் வெளியிட்ட தகவல்!
சீசனுக்கு முன்பாக ஹர்திக் பாண்ட்யா மற்றொரு அணிக்கு மாற்றப்படலாம். இந்த பரிமாற்ற ஒப்பந்தம் தோல்வியடைந்தால், ரோஹித் ஷர்மாவின் தலைமையில் விளையாட ஹர்திக் பாண்ட்யா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக மும்பை அணி, பயிற்சியாளர் பிரிவிலும் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. கீரோன் பொல்லார்ட் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன், முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேட்டிங் பயிற்சியாளராகவும், மிட்செல் மெக்கலெனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், டி. திலீப் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும், தவால் குல்கர்னி மேம்பாட்டுப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.