AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

U19 Asia Cup 2026: 2026 U19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! சேவாக், டிராவிட் மகன்கள் இடம்!

India U19 Squad: ஓமானில் 2026 நவம்பர் 5-14 வரை நடைபெறவுள்ள U19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லக்ஷ்யா ராய்ச்சந்தானி தலைமையில், வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் மகன்களான ஆர்யவீர் சேவாக், அன்வே டிராவிட் அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்தியா, 'ஏ' பிரிவில் நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது. 2026 நவம்பர் 8 தீபாவளியன்று பாகிஸ்தானுடனான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

U19 Asia Cup 2026: 2026 U19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! சேவாக், டிராவிட் மகன்கள் இடம்!
அன்வே டிராவிட் - ஆர்யவீர் சேவாக்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Oct 2026 18:04 PM IST

வருகின்ற 2026 நவம்பர் 5 முதல் 14 வரை ஓமானின் மஸ்கட்டில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை (U19 Asia Cup 2026) போட்டிக்கான இந்திய அணியை (Indian Cricket Team) பிசிசிஐ அறிவித்துள்ளது. லக்ஷ்யா ராய்ச்சந்தானி இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் மகன்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆர்யவீர் சேவாக் மற்றும் அன்வ்யா டிராவிட் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 19 வயதுக்குட்பட்டோர் அணிகள் இடம்பெற்றுள்ள 8 அணிகள் கொண்ட இப்போட்டியில், இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ALSO READ: இளம் இந்திய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு.. ரைசிங் ஆசியக் கோப்பைக்கான முழு அட்டவணை இதோ!

50 ஓவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில், இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி ‘ஏ’ பிரிவில் தனது முதல் போட்டியை 2026 நவம்பர் 6 நேபாளத்திற்கு எதிராக விளையாடுகிறது. இரண்டாவது போட்டியில், இந்திய அணி தீபாவளி நாளான வருகின்ற 2026 நவம்பர் 8ம் தேதி பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். லீக் ஸ்டேஜ் போட்டிகளின் கடைசிப் போட்டியை இந்திய அணி 2026 நவம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக விளையாடுகிறது. லீக் ஸ்டேஜ் போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும். இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் 2026 நவம்பர் 12 அன்றும், இறுதிப் போட்டி 2026 நவம்பர் 14 அன்றும் நடைபெறும். அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்குத் தொடங்கும்.

ALSO READ: சுப்மன் கில்லின் நெத்தியில் புதிய சாதனம்.. வைரலாகும் டெம்பிள்.. அது என்ன?

இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி:

லக்ஷ்ய ரைச்சன்டானி (கேப்டன்), ஆர்யவீர் சேவாக், வி.கே.வினீத், யஷ்வர்தன் சிங் சவுகான் (துணை கேப்டன்), குஷாக்ரா ஓஜா, அர்ஜுன் ராஜ்புத், மணல் சவுகான், அன்வே டிராவிட் (விக்கெட் கீப்பர்), ரஜத் பாகேல் (விக்கெட் கீப்பர்), ஆர்யான் சவ்யா பட்வீர், மோவின் சவ்வஸ்வீர், வி. வினோத், இஷான் சூட்.

ஆர்யவீர் மற்றும் அன்வே செயல்திறன் எப்படி?

ஆசியக் கோப்பைக்கான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பெற்ற ஆர்யவீர் சேவாக், இதுவரை இளையோர் ஒருநாள் போட்டிகளில் 36.33 சராசரியில் 109 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 47 ஆகும். மறுபுறம், அன்வே டிராவிட் நான்கு இளையோர் ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 37 சராசரியில் 148 ரன்கள் எடுத்துள்ளார்.

Follow Us