AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: ஒருநாள் போட்டியில் கம்பேக்..? ரகசியத்தை உடைத்த புவனேஷ்வர் குமார்!

Bhuvneshwar Kumar's ODI Comeback: இந்திய T20 அணிக்குத் திரும்பிய புவனேஷ்வர் குமார் நியூசிலாந்துக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படவில்லை. தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அதிகம் யோசிக்காத புவனேஷ்வர், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி ஒருநாள் அணிக்குத் திரும்ப இலக்கு வைத்துள்ளார். 2027 உலகக் கோப்பை கனவுடன், உடற்தகுதி மற்றும் செயல்திறனை மேம்படுத்துவது அவசியம் எனத் தேர்வுக் குழு கருதுகிறது.

Team India: ஒருநாள் போட்டியில் கம்பேக்..? ரகசியத்தை உடைத்த புவனேஷ்வர் குமார்!
புவனேஷ்வர் குமார்Image Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Oct 2026 18:49 PM IST

பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) இந்திய அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்தனர். அதன்படி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்காக புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு (Indian Cricket Team) திரும்பினார். முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் மட்டுமே அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. மழை காரணமாகப் போட்டி கைவிடப்பட்டதால், அவரால் அந்தப் போட்டியில் விளையாட முடியவில்லை. தற்போது புவனேஷ்வர் குமார் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் அந்த 3 போட்டிகளிலும் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி முடிந்த பிறகு, புவனேஷ்வர் குமார் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ALSO READ: சீம் பிட்ச்சில் சதம்.. அபிஷேக் அதிரடியை பார்த்து வியந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு மீண்டும் திரும்பிய புவனேஷ்வர் குமாரிடம், நேற்று அதாவது 2026 அக்டோபர் 27ம் தேதி போட்டிக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிற்குத் திரும்புவது குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசிய புவனேஷ்வர் குமார், “எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நான் பெரிதாக யோசிக்கவில்லை. மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. அது சையத் முஷ்டாக் அலி கோப்பையாக இருந்தாலும் சரி, விஜய் ஹசாரே கோப்பையாக இருந்தாலும் சரி, நான் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவேன்” என்று கூறினார்.

ஒருநாள் போட்டியில் விளையாடுவாரா புவனேஷ்வர் குமார்..?

புவனேஷ்வர் குமார் கடந்த 2025ம் ஆண்டு டி20 வடிவமான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடினார். அவர் மீண்டும் இந்திய டி20 அணிக்குத் திரும்புவது, அடுத்த 2027ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை அணியிலும் அவருக்கு இடத்தைப் பெற்றுத் தரும். இதன் காரணமாகவே, இந்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் விஜய் ஹசாரே கோப்பையிலும் விளையாட புவனேஷ்வர் குமார் முடிவு செய்துள்ளார்.

ALSO READ: முடிந்த நோ பால் வீசாத சாதனை.. களமிறங்கியதும் புவனேஷ்வருக்கு ஏற்பட்ட அடி!

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால், தேர்வுக் குழு புவனேஷ்வரையும் கண்காணித்து வருகிறது. இருப்பினும், 3 டி20 போட்டிகளில் புவனேஷ்வரின் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒருநாள் போட்டிகளில் மீண்டும் களமிறங்க, அவர் தனது உடற்தகுதி மற்றும் செயல்திறன் இரண்டையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது புவனேஷ்வருக்கு தனது செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள 2 போட்டிகள் உள்ளன. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் புவனேஷ்வர் குமார் மீண்டும் களமிறங்குவாரா இல்லையா என்பதை ரசிகர்கள் கவனிப்பார்கள்.

Follow Us