IND W vs ZIM W: ஜிம்பாப்வேக்கு எதிராக பந்தில் விளையாடிய வைஷ்ணவி.. இந்திய மகளிர் அணிக்கு 132 ரன்கள் இலக்கு!
IND W vs ZIM W 3rd ODI: இந்தியா - ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு 132 ரன்களை வெற்றி இலக்காக ஜிம்பாப்வே அணி நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்க உள்ளது.
இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு (IND W vs ZIM W) இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு 130 ரன்களை வெற்றி இலக்காக ஜிம்பாப்வே அணி நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) களமிறங்க உள்ளது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசி வைஷ்ணவி சர்மா 10 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஏற்கனவே, இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: தீப்தி ஷர்மா சதம்.. இந்திய மகளிர் அணியில் புதிய வரலாறு படைப்பு!
முழுமையாக வெல்லுமா இந்திய மகளிர் அணி..?
ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது. தற்போது, டி20 போட்டிகளுக்குப் பிறகு, இந்திய அணி ஒருநாள் தொடரையும் முழுமையாக வெல்லும் தருவாயில் உள்ளது. வதோதராவில் நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 39.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணிக்காக வைஷ்ணவி சர்மா சிறப்பாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




டாஸ் வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல தொடக்கம் அமையவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் மீதமுள்ள ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான ஆட்டத்தால், ஜிம்பாப்வேயின் 4 பேட்ஸ்மேன்களால் மட்டுமே இரட்டை இலக்க ரன்களைக் கடக்க முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர் மொடெஸ்டர் முபாச்சிக்வா 37 ரன்களும், கேப்டன் ஜோசபின் என்கோமோ 35 ரன்களும், சீட்ஸா துரூரு 20 ரன்களும், நியாசா குவாஞ்சுரா 10 ரன்களும் எடுத்தனர். இவ்வாறு, ஜிம்பாப்வே அணி முழுவதும் 39.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ALSO READ: 28 ஆண்டுகளில் முதல் முறை.. உலக சாதனை படைப்பாரா ஹர்மன்பிரீத் கவுர்..?
வைஷ்ணவி சர்மா 5 விக்கெட்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா சிறப்பாகப் பந்து வீசினார். இந்த போட்டியில் வைஷ்ணவி 10 ஓவர்களில், ஒரு மெய்டன் ஓவர் உட்பட, 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது வைஷ்ணவிக்கு 3வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவின் கிராந்தி கவுர் 7 ஓவர்களில் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சயாலி சத்கரே 6 ஓவர்களில் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.