AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Indian Women Cricket Team - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

Indian Women Cricket Team - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

இந்திய மகளிர் அணி 1976 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது . அந்த நேரத்தில், அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஒரு பகுதியாக இல்லை, 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தின் (WCAI) கீழ் விளையாடியது. இருப்பினும், 2006-07 ஆம் ஆண்டில், அது BCCI இன் ஒரு பகுதியாக மாறியது, அதன் பின்னர், இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் படிப்படியாக முன்னேறியுள்ளது. இந்திய மகளிர் அணி மூன்று வடிவங்களிலும் பங்கேற்கிறது மற்றும் 1978 முதல் உலகக் கோப்பையில் விளையாடி வருகிறது. இது 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியை எட்டியது, மேலும் 2020 இல் டி20 உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்திய அணி 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றது மற்றும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றது.

Read More

Harmanpreet Kaur: வரலாற்றில் முதல் பெண் வீராங்கனை..ஜெய்ப்பூர் நஹர்கர் கோட்டையில் ஹர்மன்பிரீத் கவுர் சிலை..!

Harmanpreet Kaur Makes History: இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உலகில் முழு உருவ மெழுகுச் சிலை பெறும் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் கோட்டையில் அமைந்துள்ள 'ஹிஸ்டோரிகா' அருங்காட்சியகத்தில் இந்தத் தத்ரூபமான சிலை திறக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் 17 வயது கிரிக்கெட் வீராங்கனை தற்கொலை.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

17 Year Old Female Cricketer Self Harm: தெலங்கானாவைச் சேர்ந்த 17 வயது பெண் கிரிக்கெட் வீராங்கனை நந்தினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில் பிசிசிஐ (BCCI) 19 வயதுக்குட்பட்டோர் அணியில் நந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

On This Day in 2025: உலகக் கோப்பைக்கான 52 ஆண்டுப் பயணம்! சாம்பியன் பட்டத்தை தூக்கிய இந்திய மகளிர்!

Indian Women's Cricket: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 52 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது. 2025 நவம்பர் 2 அன்று நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, கோப்பையை வென்றது. ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோரின் பங்களிப்பால் இந்த வரலாற்று வெற்றி சாத்தியமானது.

MS Dhoni: தோனி அனுப்பிய ரகசிய வாட்ஸ்அப் வாழ்த்து.. ஸ்மிருதி மந்தனா சொன்ன சீக்ரெட்!

Dhoni Mandhana conversation: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றபோது, எம்.எஸ். தோனி, ஸ்மிருதி மந்தனாவுக்கு வாட்ஸ்அப் மூலம் வாழ்த்து தெரிவித்தார். தனது எண்ணை அவரிடம் மட்டும் இருந்ததால், அணியின் அனைவருக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பியதாக தோனி கூறினார்.

IND W vs ZIM W: ஹர்மன் – ஸ்மிருதி கைகுலுக்காத சம்பவம்! ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் பிரிவு? நடந்தது என்ன?

Mandhana-Kaur Handshake Snub: இந்திய மகளிர் அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வென்றது. இந்த வெற்றியின் போது, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா கைகுலுக்காத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இடையே பிளவு உள்ளதா அல்லது இது வெறும் தற்செயலானதா என்ற கேள்விகள் எழுகின்றன. இதுவரை உறுதியான ஆதாரம் இல்லை, அணிக்குள்ளே எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதே உண்மை.

IND W vs ZIM W: ஜிம்பாப்வே மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!

India Women vs Zimbabwe Women 3rd ODI: இந்தியா - ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஜிம்பாப்வே மகளிர் அணியை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தியது.

IND W vs ZIM W: ஜிம்பாப்வேக்கு எதிராக பந்தில் விளையாடிய வைஷ்ணவி.. இந்திய மகளிர் அணிக்கு 132 ரன்கள் இலக்கு!

IND W vs ZIM W 3rd ODI: இந்தியா - ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு 132 ரன்களை வெற்றி இலக்காக ஜிம்பாப்வே அணி நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்க உள்ளது.

IND W vs ZIM W: 28 ஆண்டுகளில் முதல் முறை.. உலக சாதனை படைப்பாரா ஹர்மன்பிரீத் கவுர்..?

Harmanpreet Kaur Shatters Records: இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் 37 வயதில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். மிதாலி ராஜின் சாதனையை முறியடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் 8 சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீராங்கனையாக திகழ்கிறார். வயதான வீராங்கனையாக சதம் அடித்தது மட்டுமின்றி, ஓப்பனிங் இல்லாத பிரிவிலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

IND W vs ZIM W: தீப்தி ஷர்மா சதம்.. இந்திய மகளிர் அணியில் புதிய வரலாறு படைப்பு!

Deepti Sharma's Record Century: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தீப்தி ஷர்மா 106* ரன்கள் குவித்து, ஆறாம் வரிசையில் சதம் அடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார். ஹர்மன்பிரீத் கவுர் 126 ரன்கள் எடுத்தார். இந்தச் சதங்களின் உதவியுடன் இந்தியா 328 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வேயை வீழ்த்தி, 2-0 எனத் தொடரைக் கைப்பற்றியது.

IND W vs ZIM W: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் அணி..!

India Women vs Zimbabwe Women 2nd ODI: ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எடுத்தது. இந்த பெரிய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி, 48.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஹர்மன்பிரீத் கவுருக்கு எழுந்து நின்று கைதட்டிய ஸ்மிருதி மந்தனா! மைதானத்தில் நெகிழ்ச்சியான தருணம்!

Viral Video: ஸ்மிருதி மந்தனா கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அவருக்கும் ஹர்மன்பிரீத் கவுருக்கும் இடையிலான உறவு குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகின. இந்நிலையில், ஹர்மன்பிரீத் சதமடித்ததும் ஸ்மிருதி எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தியது, இருவருக்கும் இடையிலான பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் தருணமாக அமைந்தது.

IND W vs ZIM W: சதம் அடித்து கலக்கிய ஹர்மன் – தீப்தி.. இந்திய அணி 328 ரன்கள் குவிப்பு!

India Women vs Zimbabwe Women 2nd ODI: ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் மற்றும் தீப்தி சர்மா சதமடித்திருந்தனர்.

IND W vs ZIM W: கலக்கிய ஹர்மன்ப்ரீத் கவுர்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தல்!

Harmanpreet Kaur Century: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 101 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டியில் அவரது 8 சதமாகும். மேலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார்.

India vs Pakistan: பாகிஸ்தானில் 2028 டி20 உலகக் கோப்பை.. இந்திய மகளிர் அணி பங்கேற்குமா..?

2028 Women's T20 World Cup: 2028 மகளிர் டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், இந்தியா பயணிக்காது. இதனால், ஐசிசி "கலப்பின மாதிரி"யை பரிசீலித்து வருகிறது. இதன் கீழ், இந்தியாவின் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் பதற்றம் காரணமாக இத்தகைய ஏற்பாடு அவசியம். இது சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை போன்ற முன்னுதாரணங்களைப் பின்பற்றுகிறது.

IND W vs ZIM W: பிரதிகா ராவல் சதம்.. முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை முடித்த இந்திய மகளிர்!

India Women vs Zimbabwe Women 1st ODI: ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 27.1 ஓவர்களில் 200 ரன்களை விரட்டி வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய பிரதிகா ராவல் சதம் அடித்து வெற்றியை பெற்று கொடுத்தார்.